search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indianwells tennis"

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
    • இதில் மெத்வதேவை வீழ்த்திய அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் அல்காரஸ் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது.
    • இதில் ரிபாகினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை சந்தித்தார்.

    இதில் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரிபாகினா வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லே- பிரிட்டனின் நியல் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 2-6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயைக்கும் மூன்றாவது செட்டை 10-8 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து பெற்ற தொடரில் கோப்பை வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்துள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் இறுதிக்கு முன்னேறினர்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் மெத்வதேவ் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சபலென்கா, ரிபாகினா இறுதிக்கு முன்னேறினர்.
    • நேற்று நடந்த அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முதல் ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ரிபாகினா இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோத உள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், இத்தாலி வீரர் சின்னரை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கனடா வீரர் அகர் அலிசமெவை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அல்காராஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். முதல் செட்டை 6-4 என சின்னர் கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-4 என பிரிட்ஸ் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.

    இதன்மூலம் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், சின்னருடன் மோத உள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் டேவிடோவிச்

    போகினாவை சந்தித்தார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை மெத்வதேவ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.

    இதன்மூலம் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    • ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் அல்காரஸ் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும்.
    • இவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமை பெற்றார்

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூரை சந்தித்தார்.

    இதில் அல்காரஸ் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் 132-வது ஆட்டத்தில் ஆடிய அல்காரஸ் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அமெரிக்க ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோ 131 ஆட்டங்களில் 100-வது வெற்றியை அடைந்து முதலிடத்தில் உள்ளார்.

    ×