search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indira Gandhi Square"

    • புதுவை நகர பகுதியை விழுப்புரம், திண்டிவனம், கடலூர், சென்னை சாலைகளுடன் ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னல்கள் இணைக்கிறது.
    • ராஜீவ்காந்தி சிக்னல், இந்திராகாந்தி சிக்னலை கடந்து 100 அடி சாலையை இணைக்கும் வகையில் 1 ½ கி.மீட்டர் தூர மேம்பாலத்திற்கு திட்டம் தயாரிக்கப்பட்டது.

    புதுச்சேரி

    புதுவை நகர பகுதியை விழுப்புரம், திண்டிவனம், கடலூர், சென்னை சாலைகளுடன் ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னல்கள் இணைக்கிறது.

    கடலூர், சென்னை, திண்டிவனம், விழுப்புரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சிக்னல்களில் நிற்காமல் செல்ல புதிதாக பொறுப்பேற்ற என்.ஆர்.காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கும் மேம்பாலம் ராஜீவ்காந்தி சிக்னல், இந்திராகாந்தி சிக்னலை கடந்து 100 அடி சாலையை இணைக்கும் வகையில் 1 ½ கி.மீட்டர் தூர மேம்பாலத்திற்கு திட்டம் தயாரிக்கப்பட்டது.

    இந்த மேம்பாலத்துடன் திண்டிவனம், விழுப்புரம் சாலை இணைக்கப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய சாலைகள் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அமைச்சக அதிகாரிகள் சமீபத்தில் புதுவையில் ஆய்வு செய்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி முடித்தனர். இந்த நிலையில் ரூ440 கோடி மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாககொள்கை ரீதியில் மத்திய சாலை பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    ×