search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Influenza Virus Fever"

    • பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது.
    • ஜனவரி மாதம் முதல் இதுவரை 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கும் நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது.

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், இன்புளுவன்சா காய்ச்சலுக்கு தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 819 பேர் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 282 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய் பாதிப்பை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ×