என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Innocent"
- 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.
- 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடாவை சேர்ந்தவர் இன்னசென்ட்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் இன்னசென்ட். 1972-ம் ஆண்டு ஷோபனா பரமேஸ்வரன் நாயர் தயாரிப்பில் ஏ.பி.ராஜ் இயக்கிய நிருதசாலா படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.
அதன்பின்பு குணச்சித்திர வேடங்களிலும், நகை ச்சுவை நடிப்பிலும் கொடிகட்டி பறந்தார். 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.
இன்னசென்டிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மெல்ல, மெல்ல நோயில் இருந்து மீண்டார்.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக இன்னசென்டை உறவினர்கள் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த இன்னசென்டுக்கு நேற்றிரவு சுவாச பிரச்சினையும், மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் இன்னசென்ட் மரணம் அடைந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு வயது 75.
இன்னசென்ட் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் மலையாள திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து சென்றனர். அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் இன்னசென்ட் உடல் இன்று கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான நடிகர், நடிகைகள், ரசிகர்கள், சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்பு இன்னசென்ட் உடல் அவரது சொந்த ஊரான இரிஞ்சாலகுடாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை காலை 10 மணிக்கு தாமஸ் பேராலயத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் நடைபெறுகிறது.
மரணம் அடைந்த நடிகர் இன்னசென்ட் சாலக்குடி தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆவார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
அப்போது தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
நடிகர் இன்னசென்ட் மரணம் பற்றிய தகவல் அறிந்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் இன்னசென்டின் மறைவு கேரளாவுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு உள்ளார்.
இன்னசென்ட் நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். இன்னசென்ட் இறந்தாலும் அவர் எப்போதும் என்னுடன் தான் இருப்பார் என மோகன்லால் கூறியுள்ளார்.
- தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமடைந்த மலையாள நடிகர் இன்னொசென்ட் காலமானார்.
- இவருடைய மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட், தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிப்புக்காக கேரள அரசு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் மலையாள நடிகர் சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இன்னொசென்டுக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிண் குணம் அடைந்தார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் மீண்டும் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து, எக்மோ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் இன்னொசென்ட் நேற்று இரவு காலமானார். மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் கொரோனா தொற்று, சுவாச நோய்கள், பல உறுப்புகள் செயல்படாதது மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் இன்னொசென்ட்டின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட்
- பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் பல ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் கொச்சியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்னசென்ட்
அவருக்கு புற்று நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இன்னசென்ட் சில வருடங்களுக்கு முன்பாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்தார். அன்றிலிருந்து புற்று நோய் குறித்த விழிப்புணர்வை சமயம் கிடைக்கும் போதெல்லாம் பொது இடங்களில் பேசி வந்தார். தன்னுடைய அனுபவத்தை 'புற்று நோய் வார்டில் சிரிப்பு' என்ற பெயரில் புத்தகமாகவே எழுதி பதிவு செய்திருந்தார்.
இது புற்று நோயால் ஏற்பட்ட மன அழுத்தத்தை எப்படி சமாளித்தார் என்பதை வெளிப்படுத்தியிருந்தது. அவர் புற்று நோய் தாக்கத்தில் சிகிச்சை பெறுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நோயின் தீவிரத்தால் தற்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மலையாள திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் இன்னசென்ட்.
சினிமாவில் பிரபலமான இன்னசென்ட் இடதுசாரி சிந்தனை கொண்டவர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளராக கேரளாவின் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
இந்த முறையும் அவர், தேர்தலில் போட்டியிடுவாரா? என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இது தொடர்பாக இன்னசென்ட் அளித்த பேட்டி வருமாறு:-
பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுமாறு கம்யூனிஸ்டு தலைவர்கள் பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இம்முறை தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் இல்லை. இதற்கு என் உடல்நிலையும் ஒரு காரணம்.
நான், இப்போது மிகவும் சோர்வாக உள்ளேன். எனவேதான் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை.
தோல்வி பயம் காரணமாக தேர்தலை சந்திக்க பயப்படவில்லை. எனது தந்தை ஒரு கம்யூனிஸ்டு. அவர், அடிக்கடி எனக்கு ஒரு அறிவுரை கூறுவார். நமது விருப்பங்கள் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பார்.
இதை நான், முழுமையாக உணர்ந்துள்ளேன். எனவே தான் இத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்க நினைத்துள்ளேன்.
மூத்த தலைவர்கள் பலரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பேசுவதை பலமுறை கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் நடைமுறையில் தங்களது பதவிகளை விட்டுக்கொடுக்க முன் வருவதில்லை.
பாராளுமன்றத்தில் அமர்ந்து தூங்குவது பலருக்கும் சுகமாக இருக்கிறது. இதில் பயன் இல்லை. இளைஞர்கள் பொறுப்புக்கு வந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Innocent #Parliamentelection
விக்கிரவாண்டி:
விழுப்புரம் கூட்டேரிப்பட்டு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து எச்சரிக்கை ஒளிரும் விளக்கை சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: மேகதாது அணை பிரச்சினைபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: காவிரி ஆறு மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதன்படி காவிரி ஆற்றில் அணை கட்டும் போது சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி பெறாமல் எந்த ஒரு அணையும் கட்டக் கூடாது என்பது சட்டவிதி. மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கேள்வி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றசாட்டுகள் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
பதில்: ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கீழ் பணியாற்றும் காவல்துறையினர் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றனர். அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministercvshanmugam #ponmanickavel
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்