என் மலர்
நீங்கள் தேடியது "Instagram Post"
- சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்
- பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
இந்த வெற்றியை இந்திய வீரர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா அவரது ஸ்டைலில் கொண்டாடினார். பிட்ச் மத்தியில் கோப்பையை வைத்து பாண்ட்யா இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல ஸ்டைலாக போஸ் கொடுப்பார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற போதும் அவரது தனித்துவமான ஸ்டைலில் போஸ் கொடுத்தார். அதே மாதிரி இந்த முறையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். இந்தப் பதிவு தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
- பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
- கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
பெங்களூரு:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, தான் பயிற்சி மேற்கொள்ளும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காயம் காரணமாக சுமார் ஓராண்டு காலமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலம் குணமாகி அவர் மீண்டு வருகிறார். இந்த சூழலில் அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் அவரை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்ற வேளையில் களத்தில் பயிற்சி மேற்கொள்ளும் படத்தை பும்ரா வெளியிட்டுள்ளார்.
'கம்மிங் ஹோம்' என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து பயிற்சி மேற்கொள்வது போன்ற படங்களை அவர் வெளியிட்டுள்ளார். வரும் அக்டோபரில் இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் அவர் விளையாடுவது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்.
29 வயதான பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு முதுகு வலி காரணமாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
- ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் மருத்துவர் பதிவிட்டுள்ளார்.
- சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என ஆதங்கம்.
செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு என நயன்தாரா பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மருத்துவர், செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.
நெபுலைசர் குறித்து சமந்தா பதிவிட்டபோதும் எதிர்க்குரல் எழுப்பியவர்தான் Liverdoc என்ற ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ்.
உடல் ஆரோக்கியம் தொடர்பான பதிவா? உணவு ஆலோசகருக்கான விளம்பரமா? என டாக்டர் நயன்தாராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என மருத்துவர் சரமாரியாக புகார் தெரிவத்துள்ளார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து, செம்பருத்தி டீ தொடர்பான பதிவை நயன்தாரா நீக்கியுள்ளார்.
மேலும், முட்டாள்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என மார்க் ட்வைன் கருத்தை நயன்தாரா பதிவு செய்துள்ளார்.