search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insurance schemes"

    • சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு அளிக்கப்படுகிறது.
    • 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து, பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா என்கிற பெயரில் விபத்து காப்பீடு திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜெ.ஜெ.பி.ஒய்.,) எனும் ஆயுள் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.வங்கி கணக்கு வைத்துள்ளோர் அனைவரும் இந்த காப்பீடு திட்டங்களில் பயனாளி களாக சேர்கப்படுகின்றனர்.

    சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் வெறும் 20 ரூபாய் ஆண்டு பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஜீவன் ஜோதி திட்டத்தில் ஆண்டு பிரிமியம் 436 ரூபாய்க்கு 2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளியாக இணைய வயது வரம்பு தகுதி மட்டுமே உள்ளது. சுரக் ஷா காப்பீடு திட்டத்தில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டோரும், 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர், ஜீவன் ஜோதி திட்டத்திலும் இணையலாம்.வங்கிகள் மூலம் மலிவான பிரீமிய த்தில், அதிக பலன் தரும் இந்த திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. அதனால், காப்பீடு திட்ட பயனாளிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.இந்நிலையில் இரு காப்பீடு திட்டங்களிலும் 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து, அனைத்து வங்கி தலைமையுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பர ன்ஸிங்கில் பேசியுள்ளார்.அதனடிப்படையில் அனைத்து வங்கிகளும், காப்பீடு திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட அளவில் இயங்கும் தங்கள் வங்கி கிளைகளுக்கு அறிவு றுத்தியுள்ளன.

    காப்பீடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் அனைவரையும் பயனா ளியாக இணைப்பதற்காக, கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

    ×