search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intel"

    • அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது.
    • அடுத்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் சேமிக்கும்.

    இன்டெல் நிறுவனம் தொழில்நுட்ப துறையின் சிப் உற்பத்தியில் தனது போட்டியாளர்களான என்விடியா (NVIDIA) மற்றும் ஏஎம்டி (AMD) உள்ளிட்டவைகளுடனான போட்டியை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    உலகம் முழுக்க தங்களது அலவலகங்களில் பணியாற்றி வருவோரில் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை காரணமாக இண்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களில் 15 ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது. இதனை இன்டெல் கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேட் கெல்சிங்கர் அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் இன்டெல் நிறுவனம் அடுத்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் சுமாராக ரூ. 8.28 லட்சம் கோடியை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    பணி நீக்கம் தவிர்த்து நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எதிர்பார்த்த வருவாய் இல்லாதது, ஏஐ துறையில் முழுமையான பலன்களை அடையாமல் இருப்பது, செலவீனங்கள் அதிகளவில் இருப்பது உள்ளிட்டவை இன்டெல் பணிநீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

    • வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
    • சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் .

    அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் 'இன்டெல்' மற்றும் 'ஏஎம்டி' சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.

    இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

    சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.




    இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.

    மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

    இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக, சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என  நம்பி உள்ளது.

    • விபத்தில் சிக்கிய சைனிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது.
    • டி.ஒய். பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், புகழ் பெற்ற சிப் டிசைனருமான அவ்தார் சைனி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    செம்பூரில் வசிக்கும் சைனி தன்னுடன் சைக்கிள் ஓட்டும் குழுவுடன் இணைந்து இன்றும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது நெருள் ஜன்ஷன் மற்றும் என்.ஆர்.ஐ. சீவுட்ஸ் சிக்னல் அருகே இன்று காலை 5.50 மணிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

    நவி மும்பையில் உள்ள பாம் பீச் சாலையில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த சைனி மீது வேகமாக வந்த கார் மோதியது. விபத்தில் சிக்கிய சைனிக்கு படுகாயங்கள் ஏற்பட்டது.

     

    விபத்தில் சிக்கிய சைனியை அங்கிருந்தவர்கள் டி.ஒய். பாட்டில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், மருத்துவர்கள் அவரின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார். எனினும், அங்கிருந்தவர்கள் ஓட்டுனரை துரத்தி பிடித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த என்.ஆர்.ஐ. கடலோர காவல் துறை ஆய்வாளர் சதீஷ் கடம், "குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுனர், ரிஷிகேஷ் காடே மீது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கவனக் குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது."

    "ஓட்டுனர் கைது செய்யப்படவில்லை, எனினும், தொடர் விசாரணையில் ஆஜராக வேண்டும் என்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சைனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    68 வயதான சைனி இன்டெல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் இன்டெல் 386 மற்றும் இன்டெல் 486 மைக்ரோ-பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதைத் தொடர்ந்து பென்டியம் பிராசஸரை வடிவமைக்கும் குழுவை சைனி நிர்வகித்து வந்தார்.

    • இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

    சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.

    அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

    "நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    • ஜார்டன் மூரெ தொழில்நுட்ப துறையில் முன்னோடியாக விளங்கினார்.
    • சிலிகான் வேலியில் மதிப்புமிக்க மனிதர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார்.

    இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் உயிரிழிந்தார். இன்று புழக்கத்தில் இருக்கும் ஏராளமான கம்ப்யுடிங் சாதனங்கள் உருவாக மூலக் காரணமாக விளங்கியவர்களில் ஜார்டன் மூரெ இடம்பெற்று இருந்தார். மார்ச் 24 ஆம் தேதி அமைதியான முறையில் இவரின் உயிர் பிரிந்ததாக இண்டெல் நிறுவன வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மரணிக்கும் தருவாயில் ஜார்டன் மூரெ அவரின் குடும்பத்தாருடன் ஹவாயில் உள்ள தனது வீட்டில் இருந்துள்ளார். சிலிகான் வேலியில் மதிப்புமிக்க நபர்களில் ஒருவராக ஜார்டன் மூரெ இருந்து வந்தார். ஜார்டன் மூரெ மறைவுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆகியோர் இரங்கல் தெரிவிக்கும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    "இந்த உலகம் மிகப்பெரிய மனிதரான ஜார்டன் மூரெ இழந்துள்ளது. இவர் சிலிகான் வேலியை உருவாக்கிய தந்தைகளில் ஒருவர் ஆவார். தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்த உதவியர்களில் இவரும் ஒரவர் ஆவார். இவர் பின்பற்றிய நாம் அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்," என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

    "ஆர்.ஐ.பி. ஜார்டன் மூரெ. இவரின் இலட்சியம் நம்மை போன்று பலருக்கு தொழில்நுட்ப துறையில் கவனம் செலுத்த தூண்டியது. இவர் எனக்கு தூண்டுகோளாக இருந்துள்ளார். இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் இண்டெல் நிறுவனத்தார் அனைவருக்கும் இரங்கல்கள்," என்று சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    1968 ஜூலை மாத வாக்கில் இண்டெல் நிறுவனத்தை ஜார்டன் மூரெ மற்றும் ராபர்ட் நைஸ் இணைந்து துவங்கினர். இருவரும் நீண்டகால நண்பர்கள் ஆவர். மூரெ இண்டெல் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவராக பணியாற்றி வந்தார். பின் 1979 ஆம் ஆண்டு இவர் இண்டெல் நிறுவன நிர்வாக குழு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். 

    • இண்டெல் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ஸ்லைடபில் டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்துள்ளன.
    • இந்த ஸ்லைடபில் டிஸ்ப்ளே கணினிகளுக்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.

    இண்டெல் இன்னோவேஷன் டே நிகழ்வை ஒட்டி இண்டெல், சிஇஒ பேட் கெல்சிங்கர் மற்றும் சாம்சங் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெஎஸ் சோய் இணைந்து ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப்-ஐ அறிமுகம் செய்தனர். இது உலகின் முதல் 17 இன்ச் ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப் ஆகும்.

    இந்த ஸ்லைடபில் டிஸ்ப்ளேவை ஜன்னல் போன்று பக்கவாட்டு பகுதியில் திறக்க முடியும். கடந்த ஆண்டு சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் ஸ்மார்ட்போனில் சிறிய அளவில் ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. அகலமான மற்றும் செங்குத்தான ஸ்லைடபில் போர்டபில் ப்ரோடோடைப்கள் 2022 மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், பெரிய டிஸ்ப்ளே கொண்ட சாதனமாக இது அமைந்துள்ளது.

    தென் கொரியா வந்திருந்த போது இந்த ப்ரோடோடைப்-ஐ பார்த்ததாக ஜெஎஸ் சோய் தெரிவித்து இருக்கிறார். இது எதிர்கால கணினிக்கான தலைசிறந்த எடுத்துக் காட்டு தான் இந்த ஸ்லைடபில் டிஸ்ப்ளே என அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக அசுஸ் நிறுவனம் சென்புக் 17 போல்டு OLED மடிக்கக்கூடிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விற்பனை விரைவில் துவங்க உள்ளது.

    ஸ்லைடபில் டிஸ்ப்ளே மாடல் எப்போது வர்த்தக பயன்பாட்டுக்காக எப்போது அறிமுகம் செய்யப்படும் என இண்டெல் அல்லது சாம்சங் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இந்த டிஸ்ப்ளே விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஒரு பிரிவை கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் சிப் வியாபாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாகவும், இதுபற்றி இரு நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்மூலம் ஐபோன்களுக்கான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இருநிறுவனங்களிடையே கடந்த ஆண்டு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தற்சமயம் இது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. இன்டெல் தொழில்நுட்பத்தை கைப்பற்றுவதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இதனை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்திருந்தது. தற்சமயம் இன்டெல் நிறுவனம் வியாபாரத்தை விற்பனை செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளை கண்டறிந்து இருப்பதாக கூறப்படுகிறது.



    குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே சமீபத்தில் கையெழுத்தாகி இருக்கும் சுவாரஸ்ய சமாதான ஒப்பந்தம் காரணமாக இன்டெல் நிறுவனம் மொபைல் 5ஜி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. இரு நிறுவனங்களின் அறிவிப்பு காரணமாக இந்த தொழில்நுட்பத்தை விநியோகம் செய்து லாபம் ஈட்டுவது தற்சமயம் சரியாக இருக்காது என இன்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார். 

    ஏப்ரல் 16 ஆம் தேதி இன்டெல் நிறுவனம் 5ஜி மொபைல் மோடெம் தொழில்நுட்ப வியாபாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. முன்னதாக குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தம் பற்றிய செய்தி வெளியானது. 

    இதுதவிர இன்டெல் நிறுவனம் ஐபோன்களுக்கென சிப்செட்களை உருவாக்கி வந்தது. இன்டெல் சிப்செட் கொண்ட ஐபோன்கள் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை போன்று இன்டெல் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Intel #FoldablePhone



    இன்டெல் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சாம்சங், ஹூவாய், எல்.ஜி., சியோமி என பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகின்றன.

    சர்வதேச காப்புரிமை அலுவலகம் மற்றும் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் இன்டெல் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் இன்டெல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பெரிய திரை கொண்ட டேப்லெட் போன்று காட்சியளிக்கிறது. இன்டெல் புதிய சாதனத்தில் மொத்தம் மூன்று டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்றுள்ளன.

    இன்டெல் கார்ப்பரேஷன் சார்பில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை லெட்ஸ்கோடிஜிட்டல் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்டெல் காப்புரிமை விண்ணப்பத்தின் தலைப்பு மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்கள் கொண்ட மின்சாதம் என வைக்கப்பட்டிருக்கிறது. காப்புரிமை விவரங்களின் படி முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனத்தை ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: LetsGoDigital

    இந்த சாதனத்தில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சுற்றிலும் பெசல்கள் இல்லாமல், கேமரா, சென்சார்கள் மற்றும் ரிசீவர்கள் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படுகிறது. ஸ்மார்ட்போனினை இருமுறை திறந்தால், பெரிய டேப்லெட் போன்று பயன்படுத்தலாம். இருமுறை மடிக்கக்கூடிய வகையில் உருவாவதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக தடிமனாக இருக்கும் என தெரிகிறது.

    டேப்லெட் சாதனம் திறக்கப்பட்ட நிலையில் மூன்று டிஸ்ப்ளே பாகங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு கேமராக்கள் என மொத்தம் ஆறு கேமராக்கள் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்துடன் ஸ்டைலஸ் பென் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதனை மடிக்கக்கூடிய சாதனத்துடன் காந்தம் போன்று இணைத்து கொள்ளலாம்.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து பார்க்கும் போது இந்த மடிக்கக்கூடிய சாதனம் சந்தையில் அறிமுகமாக சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. #Intel #FoldablePhone
    ×