search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Interim budget"

    • கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்தார்.

    நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவை சட்டசபை வருகிற 2-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் முதல்- அமைச்சரும், நிதித்துறை பொறுப்பு வகிப்பவருமான நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். #PuducherryAssembly #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானால் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.

    எனவே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக வருகிற 2-ந்தேதி புதுவை சட்டசபை கூடுகிறது.


    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டத்தில் முதல்- அமைச்சரும், நிதித்துறை பொறுப்பு வகிப்பவருமான நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒரு நாள் மட்டுமே இந்த கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. #PuducherryAssembly
    மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். #Budget2019 #ThambiDurai
    புதுடெல்லி:

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 12 மணி வரை மக்களவையும், 2 மணி வரை மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

    அதன்பின்னர் மக்களவை 12 மணிக்கு கூடியபோது பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

    அதிமுக சார்பில் மூத்த உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.

    பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட 6000 ரூபாய் உதவித்தொகை போதாது. குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை?



    மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய  நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?

    புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை.

    பாஜகவின் பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குறை கூறுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கொள்கையை மாற்றி அமைத்தது தோல்வியில் முடிந்துள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தம்பிதுரையின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். #Budget2019 #ThambiDurai
    பாராளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட்டை தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். #Budget #PiyushGoyal
    புதுடெல்லி:

    முழு பட்ஜெட்டா, இடைக்கால பட்ஜெட்டா?

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.

    மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.

    உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.

    இந்த நிலையில், பாராளுமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என வெளியான ஊடக தகவல்களை மத்திய அரசு நேற்று மறுத்து விட்டது.



    இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறும்போது, ‘‘ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்தான்’’ என்று தெரிவித்தன.

    நிதி மந்திரி பொறுப்பை கவனித்து வந்த அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்று, நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது அங்கு ஓய்வில் இருந்து வருகிறார்.

    எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.

    இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.

    தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். #Budget #PiyushGoyal
    பாராளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். #Budgetsession #PiyushGoyal
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.

    மத்திய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடும் என ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.

    உடனே காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது. அது மட்டும் இன்றி இதில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு ஏற்கனவே 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது.

    இந்த நிலையில், பாராளுமன்றத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என வெளியான ஊடக தகவல்களை மத்திய அரசு நேற்று மறுத்து விட்டது.



    இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறும்போது, “ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்தான்” என்று தெரிவித்தன.

    நிதி மந்திரி பொறுப்பை கவனித்து வந்த அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் அமெரிக்கா சென்று, நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது அங்கு ஓய்வில் இருந்து வருகிறார்.

    எனவே தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் பியூஸ் கோயல் நாளை (பிப்ரவரி 1-ந் தேதி) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    முழு பட்ஜெட் என்றால் அரசு பெரிய அளவில் தனது கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியும், நலத்திட்டங்களை வெளியிட இயலும். உத்தேச வரவுகளை பதிவு செய்ய முடியும். செலவினங்களை கணித்துக்கூற இயலும்.

    இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு வாய்ப்பு இல்லை.

    தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

    இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் டெல்லியில் கூட்டினார். அவரது தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் ராம் கிரிபால் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதைப்போல தேசியவாத காங்கிரஸ், அகாலிதளம், அ.தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், மத்திய அரசு சார்பில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், இணை மந்திரிகள் விஜய் கோயல், அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் நிறைவேற்றத்தை போல, பல்வேறு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சிகளை சபாநாயகர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Budgetsession #PiyushGoyal 
    நடுத்தர பிரிவினருக்கு பயன் அளிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #budget

    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 13-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது.

    ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வருகிற 31-ந்தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

    இந்த அரசின் பதவி காலம் முடிந்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ள அவர் இதற்காக இந்தியா திரும்புகிறார்.

    தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக இருக்கிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.

    சமீபத்தில் பொதுப்பிரிவினருக்கு பொருளாதாரத்தில் (ரூ.8 லட்சம் வரை) பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த அளவு கோலின்படி பார்த்தால் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த அதிகமான வாய்ப்பு உள்ளது.

    இதே போல கார்ப்பரேட் வரியும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படலாம். மேலும் பல்வேறு பொருளாதார சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #budget

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டம் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதிவரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. #InterimBudget #BudgetSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் வழக்கம்போல் வரும் மார்ச் மாதத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய அரசு தாக்கல் செய்ய இயலாது.

    எனவே, அரசின் செலவினங்களுக்காக சில துறைகளுக்கு நிதியாதாரங்களை ஒதுக்கீடு செய்வதற்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

    இந்நிலையில்,  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதிவரை நடைபெறும். பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


    கோப்புப்படம்

    டெல்லியில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #InterimBudget #BudgetSession  #ParliamentBudgetSession 
    ×