search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investigati"

    • காரைக்காலில் உள்ள நகைக்கடை மற்றும் வங்கி களில் போலி தங்க நகைகளை விற்றல், அட மானம் வைத்தல் உள்ளிட்ட மோசடி வழக்கில்10 பேரை, காரைக்கால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • தொடர்ந்து, 4 பேரிடமும், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள நகைக்கடை மற்றும் வங்கி களில் போலி தங்க நகைகளை விற்றல், அட மானம் வைத்தல் உள்ளிட்ட மோசடி வழக்கில், காரைக் கால் நகர போலீசார், இதுவரை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, ரிபாத் காமில், சோழன் உள்ளிட்ட 10 பேரை, காரைக்கால் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடி வழக்கில், பல்வேறு குற்ற வாளிகள் இன்னும் வெளியில் இருப்பதாகவும், அவர்களை எல்லாம் கைது செய்தால்தான், பல லட்சம் மோசடி வெளிச்சத் திற்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரித் தால் உண்மை தெரியவரும் என்ற நிலையில், ஜெரோம் அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, ரிபாத் காமில், சோழன் ஆகிய 4பேரை, போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்து, காரைக்கால் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    அதன்படி, நீதிபதி வரதராஜன், 4 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, 4 பேரிடமும், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை யின் முடிவில் மேலும் சிலர் கைது செய்யப்பட லாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    ×