search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPhone SE 2"

    ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் ஐபோன் எஸ்இ 2 அம்சங்கள், கான்செப்ட் மற்றும் ரென்டர்கள் லீக் ஆகிவருகின்றன.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இவ்விழாவில் புதிய ஐபோன் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஸ்மார்ட்போன் ஐபோன் எஸ்இ (2018) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ 2 ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் X போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலில் முன்பக்கம் நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 



    குறிப்பாக ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

    மேலும் புதிய எஸ்இ ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×