என் மலர்
நீங்கள் தேடியது "IPL 2012"
- கோப்பையை வெல்ல அனைத்து வீரர்களும் உழைத்தனர்.
- காலிஸ், நரைன் மற்றும் நான் அனைவரும் இந்த முயற்சிக்கு பங்களித்தோம்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி. இவர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டியில் விளையாடி 1 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் 98 போட்டிகள் விளையாடி உள்ளார். இதில் 7 அரை சதம் அடித்துள்ளார்.
2012-ம் ஆண்டு கொல்கத்தா அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த அணியில் மனோஜ் திவாரி இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கோப்பையை வெல்ல அனைத்து வீரர்களும் உழைத்தனர். ஆனால் பெருமையெல்லாம் கேப்டனான கவுதம் கம்பீருக்கு சென்றது என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். கவுதம் கம்பீர் தனியாக கொல்கத்தா அணியை வெல்ல அழைத்துச் செல்லவில்லை. காலிஸ், நரைன் மற்றும் நான் என அனைவரும் இந்த முயற்சிக்கு பங்களித்தோம்.
ஆனால் யார் அந்த பெருமையை ஏற்றுக்கொண்டார்கள்? கவுதம் கம்பீர் ஐபிஎல்-க்கு முன்பு ஒரு வலுவான பிஆர் அணியை நியமித்து, அனைத்து பெருமையும் அவருக்கே சேரும்படி செய்துவிட்டார்.
இவ்வாறு மனோஜ் கூறினார்.