search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ipl tickets"

    • சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
    • டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், சேப்பக்கத்தில் நடைபெறும் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. மற்றும் எல்.எஸ்.ஜி. அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10.40 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டிக்கெட்டுகளின் விலை ரூ. 1700, ரூ. 2 ஆயிரத்து 500, ரூ. 3 ஆயிரத்து 500, ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 6 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. சி.எஸ்.கே.-பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கள்ளச் சந்தையில் அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்பனையானது.

    இது தொடர்பான வினோத்குமார், அசோக் குமார், இமானுவேல், ரூபன், சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் கூறினர்.
    • குழந்தையின் தாயை காவல்துறையினர் கடுமையாக கண்டித்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையே ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் நேற்று நள்ளிரவு முதலாகவே ஏராளமானோர் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்தனர்.

    இந்நிலையில் டிக்கெட் கவுண்டருக்கு வெளியே மூதாட்டி ஒருவர் ஒரு கையில் 6 மாத கை குழந்தையும் மற்றொரு கையில், இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையும் பிடித்தபடி நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக பதட்டமாக யாரையோ தேடிக் கொண்டிருந்தார்.

    இதுபற்றி மூதாட்டியிடம் விசாரித்தபோது, டிக்கெட் கவுண்டரில் இருந்த ஒரு பெண் இந்த இரு குழந்தைகளும் அந்த மூதாட்டியிடம் சிறிது நேரம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் இரு குழந்தைகளையும் பெற யாரும் வராத நிலையில் மூதாட்டியின் கையில் இருந்த அந்த பச்சிளம் குழந்தை பசியால் அழுதது. மூதாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

    இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் காவல் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதனைக் கேட்டு அங்கு வந்த பெண் ஒருவர் மூதாட்டியின் கையில் இருந்த குழந்தையை பெற்றுக்கொண்டு இரு குழந்தைகளும் தனது பேரப்பிள்ளைகள் எனக்கூறி வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டார். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த பெண் காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை கோபமாக தலையில் தட்டினார்.

    மேலும் அந்த குழந்தையின் தாய் வந்தால் மட்டுமே குழந்தை ஒப்படைக்கப்படும் என அங்கிருந்த காவலர்கள் கூறியதை அடுத்து டிக்கெட் கவுண்டரின் வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த இரு குழந்தைகளின் தாயை அந்த பெண்மணி அழைத்து வந்தார்.

    பின்னர் குழந்தையின் தாயை கடுமையாக கண்டித்த காவல்துறையினர் அந்த இரு பெண்களின் முகவரியையும் பெற்றுக் கொண்டு விசாரணைக்கு பின்னர் குழந்தையை ஒப்படைத்தனர்.

    • டிக்கெட் விலை ₨1,500 முதல் ₨3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • சிஎஸ்கே விளையாடும், உள்ளூர் போட்டிகளுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உளள்து. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை, நான்கு முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) எதிர்கொள்கிறது. இந்த தொடரில் உள்ளூர், வெளியூர் மைதானங்கள் என மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ₨1,500 முதல் ₨3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மற்ற போட்டிகளை விட சிஎஸ்கே விளையாடும், உள்ளூர் போட்டிகளுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சிஎஸ்கே அணியின் முதல் உள்ளூர் ஆட்டம், ஏப்ரல் 3ஆம் தேதி நடக்கிறது.

    சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 16-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. #IPL2019 #CSKvsRCB

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வரை காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஐ.பி.எல். முழு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதனால் 12-வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.


    இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் டிக்கெட் விற்பனையாகும. காலை 11.30 மணிக்கு டிக்கெட் வினியோகம் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை டிக்கெட்டுகள் விற்கப்படும். மதிய உணவு இடைவேளை நேரததில் (12.30- 2 மணிவரை) கவுண்டர்கள் மூடப்பட்டு இருக்கும். அடுத்த நாட்களில் காலை 10 மணிக்கே டிக்கெட் விற்பனை தொடங்கும்.

    இந்தப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 சி,டி மற்றும் இ ஸ்டாண்டில் கீழ் பகுதிக்கான இந்த விலையிலான டிக்கெட்டுகள் விக்டோரியா சாலையில் உள்ள 6 நம்பர் பூத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல ரூ.2,500 (சி மற்றும் டி ஸ்டாண்ட் மேல்பகுதி), ரூ.5 ஆயிரம் (சி மற்றும் டி ஸ்டாண்டின் ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ்), ரூ.6,500 (எச்.ஸ்டாண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ், பெவிலியன் டெரஸ்) ஆகிய விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

    ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படமாட்டாது.

    இதேபோல புக்மை ஷோ (in.bookmyshow.com) என்ற இணைய தளத்திலும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறும். குறைந்த விலையான ரூ.1,300க்கான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே கிடைக்கும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ஆட்டம் 31-ந்தேதி நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்சுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. #IPL2019 #CSKvsRCB

    ×