என் மலர்
நீங்கள் தேடியது "Ireland team"
- டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் திணறியது.
அபுதாபி:
தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் அபுதாபியில் நடந்தது. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கல்டன் 91 ரன்னும், ஸ்டப்ஸ் 79 ரன்னும் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டும் கிரேக் யங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சில் திணறியது. அயர்லாந்து 31.5 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 4 விக்கெட்டும், நிகிடி, பார்டுயின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இரு அணிகள் மோதும் 2-வது போட்டி நாளை நடக்கிறது.
- அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.
- ஜிம்பாப்வே அணி ஒகு நாள் தொடரை கைப்பற்றியது.
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் ணற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
மேலும் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே 5 விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது. அயர்லாந்து விளையாடும் போது மீண்டும் மழை கொட்டியது. இதனால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.