search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iron mine mine"

    சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இரும்புத்தாது சுரங்கத்தில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    பீஜிங்:

    சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான இரும்புத்தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் இயங்கி வருகிறது.

    பென்க்ஸி நகராட்சிக்குட்பட்ட இந்த சுரங்கத்தில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள சுமார் 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    போதிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் சீனாவில் உள்ள பல்வேறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் உயிர்கள் பலியாவதும் தொடர்கதை ஆகிவிட்டது.

    கடந்த ஆண்டு மே மாதம் ஹுனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

    இன்றைய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை என்ன? என்பது சரியாக தெரியாததாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
    ×