search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Isa Guha"

    • பும்ரா ஒரு எம்.வி.பி. அதாவது மிகவும் மதிப்புமிக்க 'பிரைமேட்' என்று வர்ணித்தார்.
    • பாலூட்டி வகை பெரிய விலங்கினங்களை 'பிரைமேட்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீயுடன் இணைந்து வர்ணனை பணியில் ஈடுபட்ட இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை இஷா குஹா, இந்திய பவுலர் பும்ராவை இனவெறியுடன் விமர்சித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    பும்ரா ஒரு எம்.வி.பி. அதாவது மிகவும் மதிப்புமிக்க 'பிரைமேட்' என்று வர்ணித்தார். பாலூட்டி வகை பெரிய விலங்கினங்களை 'பிரைமேட்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். குறிப்பாக குரங்குக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. அதனால் பும்ராவை விலங்குடன் ஒப்பிட்டு பாராட்டுவதா என்று குஹாவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக பிரச்சினை வெடித்தது. அதை இந்த விமர்சனம் நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே நேரலையில் இஷா குஹா மன்னிப்பு கேட்டார்.

    இன்று காலை வர்ணனையின் போது அவர் கூறியதாவது:-

    நேற்று நான் வர்ணனையின் போது பல்வேறு வழிகளில் விளக்க கூடி ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். இதில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களின் மரியாதை விஷயத்தை நான் மதிக்கிறேன்.

    நான் பும்ராவின் சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சித்தேன். அதற்காக நான் தவறான வார்த்தையை தேர்ந்து எடுத்துள்ளேன். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். எந்த உள்நோக்கத்துடனும் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.

    இவ்வாறு இஷா குகா கூறியுள்ளார்.

    உடனே அருகில் இருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இஷா குஹாவை துணிச்சலான பெண் என பாராட்டினார். நேரலையில் மன்னிப்பு கேட்ட துணிச்சல் வேண்டும் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ×