என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » israeli pm
நீங்கள் தேடியது "israeli pm"
ஒருநாள் பயணமாக பிப்ரவரி 11-ம் தேதி இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #NetanyahuIndiavisit
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. டெல் அவிவ் நகருக்கு பதிலாக ஜெருசலேம் நகரம் அந்நாட்டின் தலைநகராக அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு நாடுகளின் ஆதரவை பெறுவதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தீவிரம் காட்டி வருகிறார்.
முன்னர் தூதரக உறவுகள் இல்லாத ஓமன், சாட் ஆகிய நாடுகளில் முதன்முறையாக சுற்றுப்பயணம் செய்து புதிய நல்லுறவுக்கான வாசலை அவர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
பாலஸ்தீனம் நாட்டுடனான அமைதி நடவடிக்கைகளில் முடக்கநிலை ஏற்பட்டுள்ள இவ்வேளையில் உலகத் தலைவர்களை இஸ்ரேலுக்கு சாதகமாக அணி சேர்க்க திட்டமிட்டுள்ள பெஞ்சமின் நேதன்யாகு, ஒருநாள் பயணமாக வரும் பிப்ரவரி 11-ம் தேதி இந்தியா வருகிறார்.
டெல்லியில் அன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசும் அவர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு டெல் அவிவ் நகருக்கு சென்றதும்,பெஞ்சமின் நேதன்யாகு 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியா வந்ததும் நினைவிருக்கலாம். #IsraeliPM #BenjaminNetanyahu #NetanyahuIndiavisit
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடர போதிய முகாந்திரங்கள் இருப்பதாக அந்நாட்டு போலீஸ் இன்று பரிந்துரைத்துள்ளது. #Israelpolice #BenjaminNetanyahu Netanyahubribery
ஜெருசலேம்:
யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார்.
தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என போலீசார் விசாரித்து வந்தனர். தன்மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.
விசாரணையின் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர்.
‘வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.
வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஊழல் வழக்குகள் தொடர்பாக பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இதுவரை பலமுறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சுமார் 60 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடர்வதற்கு போதிய முகாந்திரங்கள் இருப்பதாக அந்நாடு போலீஸ் தலைமையகம் இன்று பரிந்துரைத்துள்ளது.
நேதன்யாகுவும் அவரது மனைவி சாராவும் லஞ்சம் வாங்கி பண ஆதாயம் அடைந்ததன் மூலம் நாட்டுக்கு எதிரான மோசடி மற்றும் நம்பிக்கை துரோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பெஞ்சமின் நேதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான தார்மிக உரிமையை இழந்து விட்டதால் அவர் உடனடியாக இன்றே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். எனினும், தற்போது பெஞ்சமின் நேதன்யாகு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #Israelpolice #BenjaminNetanyahu Netanyahubribery
ஜெருசலேம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்படும் நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.
இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலர் ஜெருசலேம் நகரில் முகாமிட்டுள்ளனர்.
வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தவாறு திறப்பு விழாவின்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமெரிக்க அதிபர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு கூறுகையில், அமெரிக்காவை தொடர்ந்து தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க விருப்பம் தெரிவித்துள்ள கவுதமாலா, பரகுவே நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோன்ற முடிவை விரைவில் சில நாடுகள் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இனி ஜெருசலேம் இருக்கும் என்பதால் உலகில் உள்ள இதர நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X