search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அமெரிக்காவை தொடர்ந்து அனைத்து உலக நாடுகளும் ஜெருசலேமில் தூதரகங்களை திறக்க வேண்டும் - நேதன்யாகு அழைப்பு
    X

    அமெரிக்காவை தொடர்ந்து அனைத்து உலக நாடுகளும் ஜெருசலேமில் தூதரகங்களை திறக்க வேண்டும் - நேதன்யாகு அழைப்பு

    ஜெருசலேம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்படும் நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.

    இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலர் ஜெருசலேம் நகரில் முகாமிட்டுள்ளனர்.

    வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தவாறு திறப்பு விழாவின்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமெரிக்க அதிபர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு கூறுகையில், அமெரிக்காவை தொடர்ந்து தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க விருப்பம் தெரிவித்துள்ள கவுதமாலா, பரகுவே நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோன்ற முடிவை விரைவில் சில நாடுகள் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இனி ஜெருசலேம் இருக்கும் என்பதால் உலகில் உள்ள இதர நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem
    Next Story
    ×