search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IUML"

    • திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ஏற்கனவே திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • கடந்த தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் கடந்த 52 ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் தொகுதியில் திருச்சுழி, அறந்தாங்கி, திருவாடானை, பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    இவற்றில் 7,75,765 ஆண், 7,82,063 பெண், மூன்றாம் பாலினத்தவர் 82 பேர் என 15, 57,910 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 10,60,802 வாக்குகள் பதிவாகின.

    ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளராக நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக புவனேஸ்வரி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விஜயபாஸ்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இறுதிவரை நவாஸ்கனி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். 28 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் 16-வது சுற்றில் மட்டும் நயினார் நாகேந்திரன் அதிக வாக்குகள் பெற்றார். மற்ற 27 சுற்றுகளிலும் நவாஸ் கனி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

    தபால் வாக்குகளில் நவாஸ் கனி(இ.யூ.மு.லீ.) 2352, பாரதிய ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1517, வ.து.ந.ஆனந்து (அ.ம.மு.க.) 611 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 50 வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் இறுதி முடிவு இன்று அதிகாலை 1 மணிக்கு அறிவிக்கப்பட்டது. தி.மு.க கூட்டணி முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி 1,27,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கலெக்டர் வீரராகவராவ் அறிவித்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.

    நவாஸ் கனி (இ.யூ.மு.லீ.) -4,69,943

    நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா) -3,42,821

    வ.து.ந.ஆனந்த் (அ.ம.மு.க.) -1,41,806

    புவனேஸ்வரி (நாம் தமிழர் கட்சி) -46,385

    விஜய பாஸ்கர் (ம.நீ.ம.) -14,925

    1967-ம் ஆண்டு நடைபெற்ற ராமநாதபுரம் பாராளுமன்றத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் வேட்பாளர் எஸ்.எம்.சரிப் களம் இறக்கப்பட்டார். தராசு சின்னத்தில் போட்டியிட்ட அவர்வெற்றி பெற்றார்.

    கடந்த 52 ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார்.
    ×