என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Iyarkai Kazhagam"
- வானிலை சார்ந்து மேற்கொள்ளப்படும் விவசாயத் தொழில் என்பது, சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.
- சுற்றுச்சூழல் சமன்பாட்டில் அனைத்து உயிரினங்களுக்கும் பங்குண்டு.
திருப்பூர் :
காலநிலை மாற்றமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. குறிப்பாக, வானிலை சார்ந்து மேற்கொள்ளப்படும் விவசாயத் தொழில் என்பது, சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.
தொழில்நுட்ப புரட்சியில் எவ்வளவு உபகரணங்கள் வந்தாலும் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் சில பூச்சிகள் மற்றும் விலங்கினங்களின் பங்களிப்பு என்பது, எதனுடனும் ஒப்பிட முடியாததாகவே உள்ளது.அந்த வரிசையில் ஆந்தையும் இடம் பெற்றிருக்கிறது. ஆனாலும் பலரும் ஆந்தை என்றால் தீய சக்தியாக கருதும் நிலை, பேதைமைதான். உலக ஆந்தைகள் தினத்தை முன்னிட்டு, அவிநாசி அருகே சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், ஆந்தைகள் குறித்து பேசுகையில், சுற்றுச்சூழல் சமன்பாட்டில் அனைத்து உயிரினங்களுக்கும் பங்குண்டு. இதில் ஆந்தைகளின் பணி என்பது விவசாய நிலங்களில் காணப்படும் எலிகள், சிறு முயல்கள், வெட்டுக்கிளிகள் மற்றும் பிற பூச்சிகளை உணவாக்கி, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆந்தைகள் இல்லாமல் போனால், விவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆந்தை ஆண்டுக்கு 700 முதல் 800 எலிகளை உணவாக்கும் என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. எனவே, ஆந்தைகளும், விவசாயிகளின் நண்பன்தான் என்றார்.