search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jaffer"

    • ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • ஜெயிலர் படம் மூலம் இயக்குனர் நெல்சன் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜாஃபர். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறார். அந்த வகையில், இவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார்.

    இதனிடையே ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய விலை உயர்ந்த கண்ணாடியை கொடுக்கும் படி, கேட்டதாகவும், உடனே ரஜினி அந்த கண்ணாடியை தனக்கு பரிசாக கொடுத்துவிட்டதாகவும் ஜாஃபர் பதிவிட்டுள்ளார்.

    மேலும் பதிவில் கண்ணாடியின் புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய கண்ணாடியை கேட்டதும் கொடுத்ததற்கு ஜாஃபர் நடிகர் ரஜினிகாந்த்-க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

    • விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கேங்கில் நடித்திருக்கிறார் ஜாபர்.
    • கமல் சார் கூட நடிச்சது எல்லாம் நான் எதிர்பார்க்காத விஷயம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஜாபர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்தில் சந்தானம் கேங்கில் நடித்த ஜாபர், மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். விக்ரம் படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    "இது தான் என் முதல் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ், இதை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பாவக்கதையை பார்த்துவிட்டு லோகேஷ் அண்ணா என்னை நடிக்கறதுக்காக கேட்டாங்க, எந்த கேள்வியும் கேட்காம அவரு மேல உள்ள நம்பிக்கையில் நடிச்சேன். கமல் சார் கூட நடிச்சது எல்லாம் நான் எதிர்பார்க்காத விஷயம். நான் இத சரியா பண்ணுனா தான் எனக்கு பின்னாடி இருக்குறவங்களுக்கு இது ஒரு நம்பிக்கையா இருக்கும். கோரியோகிராபர் சான்ஸ் கெடச்சா, முதலில் பிரபு தேவா மாஸ்டரை தேர்வு செய்வேன். என்னோட ஸ்டைலில் அவரை ஆட வைக்கணும்." என்றார் ஜாபர்.

    ×