என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jaiswal"

    • ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான தலைவர் என்று நினைக்கிறேன்.
    • ஆதரவானவர், அக்கறையுள்ளவர், எப்போதும் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பவர்

    இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாத நிலையிலும் வீல் சேரில் அமர்ந்து கொண்டு அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு அற்புதமான மனிதரை பெற்றிருப்பது பாக்கியம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் புகழாரம் சூட்டியுள்ளார்.

    ராகுல் டிராவிட் தொடர்பாக ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    ராகுல் டிராவிட் நம்ப முடியாத அசாத்தியமான மனிதர். ராகுல் டிராவிட்டை போன்ற ஒருவரை இந்த காலக்கட்டத்தில் பெற்றிருப்பது பாக்கியம். ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். ஆதரவானவர், அக்கறையுள்ளவர், எப்போதும் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பவர்.

    அவர் வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். வீரர்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதையும் உறுதிசெய்கிறார். இது தனிப்பட்ட வீரரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஒட்டுமொத்த அணிக்கும் மிகவும் முக்கியமானது.

    கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமல்ல, மைதானத்திற்கு வெளியே அவர் தன்னை எப்படி நடத்துகிறார் என்பதையும் கற்றுக்கொள்ள அவரை நெருக்கமாக பார்ப்பது ஒரு வாய்ப்பாகும். அவர் பல ஆண்டுகளாக இவ்வளவு நேர்த்தியையும் அமைதியையும் பராமரித்து வருகிறார். மேலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

    இவ்வாறு ஜெய்ஸ்வால் ராகுல் டிராவிட்டை புகழ்ந்து கூறினார்.

    • ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
    • கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார்.

    பெங்களூரு:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.

    அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரது பேட்டிங் திறமையை பலரும் பாராடி வருகின்றனர்.

    இந்த நிலையில், ஜெய்ஸ்வாலை, பெங்களூரு வீரர் விராட் கோலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கோலி, சமீபத்தில் தான் பார்த்த மிகச்சிறப்பான பேட்டிங் என்றும், ஜெய்ஸ்வாலின் திறமை அற்புதமானது என்றும் கோலி குறிப்பிட்டு உள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறுகையில்:- நான் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக ஜெய்ஸ்வால்-ஐ இன்றே தேர்வு செய்து உலகக்கோப்பை போட்டிக்கு விளையாட வைத்திருப்பேன். ஏனென்றால் இளம் வீரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    அதேபோல ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ப்ரெட் லீ அவரது ட்விட்டர் பக்கத்தில் சூப்பராக விளையாடுகிறார் ஜெய்ஸ்வால். இப்பொழுதே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

    இதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்த அதிரடி தொடருங்கள் என கூறியிருந்தார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் நாள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

    • இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டில் சதமடித்தார்.
    • அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் 11 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

    அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா சதமடித்து அசத்தினர்.
    • முதல் விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 229 ரன்கள் சேர்த்தது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர்.

    இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் சதமடித்தார். அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து இறங்கிய விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர்.
    • பந்துக்கு பந்து விளையாடி எனது கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன்,

    வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்கிய புதுமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். அவர் 143 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.

    அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 17-வது இந்திய வீரர் ஆவார். மேலும் அறிமுக டெஸ்டில் தொடக்க வீரராக அடித்த 3-வது இந்திய வீரர், ஜெய்ஸ்வால் ஆவார். வெளிநாட்டு மண்ணில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர்.

    அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் உள்பட ஏராளமான வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    சதம் அடித்த தருணம் எனக்கு உணர்ச்சிகரமாக இருந்தது. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உணர்ச்சிகரமானது. என்னை பற்றி நான் பெருமைப்படுகிறேன். இந்திய அணியில் வாய்ப்புகளை பெறுவது கடினம். எந்த வகையிலும் என்னை ஆதரித்த, உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இதை என் தாய்-தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்.

    அவர்கள் நிறைய பங்களித்திருக்கிறார்கள். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் இப்போது அதிகம் சொல்லமாட்டேன். இது ஒரு தொடக்கம். நான் நிறைய செய்ய வேண்டும்.

    ஆடுகளம் மெதுவாக உள்ளது. அவுட் பீல்டும் மிகவும் மெதுவாக உள்ளது. அது கடினமாகவும் சவாலாகவும் இருந்தது. அதை எதிர்கொண்டு ரன்களை எனது நாட்டுக்காக குவிக்க விரும்பினேன். பந்துக்கு பந்து விளையாடி எனது கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன். இந்த சவாலை எதிர்கொள்ள விரும்புகிறேன். எல்லாவற்றிலும் நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 171 ரன்னில் அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், விராட் கோலி ஜோடி 110 ரன்கள் எடுத்தது. அடுத்து இறங்கிய ரகானே 3 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்து 76 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன், விராட் கோலி 76 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் சுழல் பந்துவீச்சில் அந்த அணி திணறியது.

    இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது.

    இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜெய்ஸ்வாலுக்கு நல்ல திறமை இருக்கிறது, அவர் தயாராக இருக்கிறார் என்பதை கடந்த காலத்தில் நமக்குக் காட்டினார்.

    அவர் விவேகமாக பேட்டிங் செய்தார். போட்டியின் எந்த சமயத்திலும் அவர் அச்சம் அடையவில்லை. நாங்கள் நடத்திய அரட்டைகள் அவருக்கு, நீங்கள் இங்கு சொந்தமானவர் என்பதை நினைவூட்டுவதாக இருந்தது.

    பந்து வீச்சில் இது ஒரு சிறந்த முயற்சி. அவர்களை 150 ரன்களுக்கு வெளியேற்றுவது எங்களுக்கு சவாலாக அமைந்தது.

    பேட்டிங் கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ரன்கள் எடுப்பது எளிதானது அல்ல. நாங்கள் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்ய விரும்பினோம். எனவே 400 ரன்களுக்கு மேல் எடுத்தோம், அதன்பின் வெளியேறி நன்றாக பந்து வீசினோம்.

    அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக அஸ்வின் பந்துவீசியது மிகவும் சிறப்பு என தெரிவித்தார்.

    • இளம் வீரரான ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
    • அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 235 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியால் 191 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    போட்டியின்போது பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 2-வது பேட்டிங் செய்யும்போது பந்து வீச கடினமாக இருக்கும். இதனால் முதலில் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ, அவ்வளவு ரன்கள் குவிக்க இந்தியா திட்டமிட்டது.

    அதற்கு ஏற்றபடி தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடினார். இவரது அதிரடியால் இந்தியா பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் 23 பந்தில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்திருந்தார். கே.எல். ராகுல் 2021-ல் துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 19 பந்தில் 50 ரன்கள் அடித்திருந்தார். தற்போது இருவரையும் ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார்.

    • ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகின்றனர்.
    • தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. டோனி தலைமையிலான இந்திய அணி அறிமுக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

    இதுவரை 8 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) தலா 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009) இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

    9-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

    ஐ.சி.சி. போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையிலான அணி கைப்பற்றியது. சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெறாதது ஏமாற்றத்தை அளித்தது.

    தற்போது டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அவரை அணுகியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அவர் டி20 போட்டியில் ஆடவில்லை. தென்ஆப்பிரிக்க தொடரிலும் அவர் ஓய்வு கேட்டுள்ளார்.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடக்க வீரர்களாக யார் ஆடுவார்கள்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகிய 5 பேர் தொடக்க வரிசைக்கான போட்டியில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில் ஜெய்ஸ்வாலும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரர்களாக வருகிறார்கள். அவர்கள் ஆட்டம் அதிரடியாகவே இருக்கிறது.

    அதே நேரத்தில் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடக் கூடியவர்கள். இதற்கிடையே அவ்வப்போது இஷான் கிஷனும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். இதனால் தொடக்க வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வு குழுவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    • ஜடேஜா 87 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 4 விக்கெட் சாய்த்தார்.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் (80), கே.எல். ராகுல் (86) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தது.

    ஜடேஜாவும் இவர்களுடன் இணைய நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்தது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் அடுத்த பந்தில் வெளியேறினார்.

    கடைசி விக்கெட்டுக்க அக்சர் பட்டேல் உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றபோதிலும் 44 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோடி ரூட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    ×