என் மலர்
நீங்கள் தேடியது "James Cameron"
- சில தினங்களுக்கு முன்பு அவதார்: தி வே ஆப் வாட்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

அவதார்: தி வே ஆப் வாட்டர்
13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த 16 ந்தேதி வெளியானது. அவதார்: தி வே ஆப் வாட்டர், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமான அவதாரின் தொடர்ச்சியாகும்.

அவதார்: தி வே ஆப் வாட்டர்
அவதார் 2 இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய மதிப்பில் ரூ 7 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் 10 நாட்களில் ரூ.300 கோடியைத் தாண்டியது. வரும் நாட்களில் நாட்டில் ரூ.500 கோடியை எதிர்பார்க்கப்படுகிறது. அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் தற்போது உலகம் முழுவதும் 1 பில்லியன் டாலர்களை நோக்கி முன்னேறி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
- இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

ஆர்.ஆர்.ஆர். படக்குழு
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி
சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 'ஆர்.ஆர்.ஆர்'திரைப்படத்தை இரண்டு முறை பார்த்துள்ளதாக ராஜமௌலி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி
அதில், "இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை அவர் மிகவும் விரும்பியதால் தனது மனைவி சுசிக்கு பரிந்துரைத்து மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளார். படம் குறித்து நீங்கள் பத்து நிமிடம் எங்களுடன் பகுப்பாய்வு செய்தது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் நான் உலகத்தின் உச்சியில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
The great James Cameron watched RRR.. He liked it so much that he recommended to his wife Suzy and watched it again with her.????
— rajamouli ss (@ssrajamouli) January 16, 2023
Sir I still cannot believe you spent a whole 10 minutes with us analyzing our movie. As you said I AM ON TOP OF THE WORLD... Thank you both ???? pic.twitter.com/0EvZeoVrVa
- இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்'.
- இப்படம் கடந்த டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

அவதார் தி வே ஆப் வாட்டர்
13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

அவதார் தி வே ஆப் வாட்டர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம் வருகிற ஜுன் 7-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. திரைப்படம் வெளியாகி பல மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஏஐ குறித்து கேமரூன் இதற்கு முன்பும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
- மனிதர்களால் தலையிட முடியாத வேகத்தில் செயற்கை நுண்ணறிவினால் செயல்படும் கணினிகள் இயங்க தொடங்கும்.
உலக புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். அவர் இயக்கத்தில் 1984ல் வெளிவந்து உலகெங்கிலும் வசூலை அள்ளி குவித்த திரைப்படம் "தி டெர்மினேட்டர்". இத்திரைப்படத்தில் அதிநவீன அறிவாற்றல் மிக்க ஆயுதங்கள் மனித இனத்தையே அழிக்க முற்படுவதாக கதை அமைந்திருக்கும். அந்த படத்தில் வரும் டெர்மினேட்டர் போன்று, இப்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தானது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
ஏஐ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்து உலகெங்கிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் சாதக பாதகங்கள் குறித்து இரு விதமான கருத்துக்கள் நிலவுகிறது. இது குறித்த தனது கவலைகளை ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.
அவரது திரைப்படத்தில் வருவது போன்று எதிர்காலத்தில் நிகழுமா? என கேட்டபோது அவர் கூறியதாவது:
ஆம். அவ்வாறு நடக்கும் என்று நம்புபவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். 1984லேயே (திரைப்படம் மூலம்) நான் எச்சரித்திருந்தேன். நீங்கள் கேட்காமல் அலட்சியப்படுத்தினீர்கள். செயற்கை நுண்ணறிவால் விளையக்கூடிய ஆபத்துக்களிலேயே ஆயுதங்கள் உற்பத்திக்கு அவற்றை பயன்படுத்துவதில்தான் அதிக அபாயம் உள்ளது. அணு ஆயுத போர் போன்ற நிலை உருவாகலாம். ஒருவர் இல்லையென்றால் மற்றொருவர் இதில் ஈடுபட்டு நிலைமையை மோசமடைய செய்து விடுவார்கள். மனிதர்களால் தலையிட முடியாத வேகத்தில் செயற்கை நுண்ணறிவினால் செயல்படும் கணினிகள் இயங்க தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏஐ குறித்து கேமரூன் இதற்கு முன்பும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். ஏஐ ஏராளமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார். மேலும், நமக்குத் தெரியாமல், அனைத்து தகவல்களையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கணினிகள் உலகை கையாளக்கூடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த துறையில் உள்ள முன்னணி நிபுணர்களும் கேமரூனின் சிந்தனையை ஒட்டியே கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபன்ஏஐ, கூகுள் போன்ற பெரிய நிறுவன அதிபர்கள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் இணைந்து ஏஐ விளைவிக்க கூடிய அபாயங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். தொற்றுநோய்களையும் அணுசக்தி யுத்த அபாயங்களையும் ஒழிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு இணையாக இதற்கும் முன்னுரிமை தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏஐ அமைப்புகளால் ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யும் வரை ஏஐ சார்ந்த அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பது 6-மாத காலமாவது நிறுத்தப்பட வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் வோஸ்னியாக் உட்பட 1,000க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் நிர்வாகிகள் கையெழுத்திட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
- சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் கோவிந்தா இண்டர்வியூ செய்தார்.
90களில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. தற்போது 61 வயதாகும் கோவிந்தா பாலிவுட் வட்டாரங்களில் தனது அனுபவங்களைப் பற்றி பிரஸ்தாபித்து வருகிறார்.
அவ்வப்போது தனது கருத்துக்களுக்காக சினிமா பத்திரிகைகளின் முதல் பக்கத்திலும் இடம் பிடிப்பார். அப்படிதான் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த அவதார் படத்தில் கதாநாயகனாகத் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறி டிராலுக்கு உள்ளானார்.
ஆனால் கோவிந்தா 90 களில் மார்க்கெட் உள்ள கதாநாயகன் என்பதையும் மறுக்க முடியாது.
இந்நிலையில் தனக்கு வந்த ரூ.100 கோடி பட்ஜெட் பட வாய்ப்பை மறுத்ததற்காக கண்ணாடியில் பார்த்து என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கோவிந்தா உச் கொட்டியுள்ளார்.
பீஷ்ம் இன்டர்நேஷனல் என்ற தனது யூடியூப் சேனலில் சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் பேசிய கோவிந்தா, ரூ.100 கோடி படத்தை நிராகரித்ததற்காக வருத்தப்படுகிறேன். எனக்கு வேலை இல்லை என்று அவர்கள்(பத்திரிகைகள்) எழுதுகிறார்கள். நானோ ரூ.100 கோடி படத்தை விட்டுவிட்டேன்.
இதற்காக நான் என்னை கண்ணாடியில் பார்த்து அந்த பிராஜெக்டை மறுத்ததற்காக என்னை நானே அறைந்து கொண்டேன் என்று கூறினார். இந்த காலத்தில் கிளிக் ஆகும் பாத்திரம் இந்தப் படத்தில் இருந்தது என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் அவதார் 2.
- அவதார் 2 படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற பெயரில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

அவதார் 2
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அவதார் 2 படத்தில் டைட்டானிக் பட கதாநாயகி கேட் வின்ஸ்லெட், நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் தமிழ் பதிப்பின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் அவதார் 2 .
- அவதார் 2 படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
அவதார் 2 படத்தில் டைட்டானிக் பட கதாநாயகி கேட் வின்ஸ்லெட், நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நவி வீரர்
இந்நிலையில், கேட் வின்ஸ்லெட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.