என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jammu srinagar
நீங்கள் தேடியது "Jammu Srinagar"
- சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.
- பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள்.
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஜம்மு பகுதியின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நாலா பகுதியில் நேற்று இரவு 10:30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்து தடையை ஏற்படுத்தி உள்ளது.
இதைதொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHA) 144-ல் உள்ள சாலைகளில் பாறைகளை அகற்றும் பணி 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, இந்த பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முன்னதாக மார்ச் 31-ம் தேதி, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 44, மேஹத் தல்வாஸ் மற்றும் கிஷ்த்வார் பதேர், ராம்பன் ஆகிய இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலத்தின் இருமுனைகளை இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை ஐந்தாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. #JammuSrinagarNH
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் தொடங்கி 40 நாட்கள்வரை உச்சகட்டமான பனிப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டின் அதிகபட்சப் பனிப்பொழிவு வரும் 31-ந் தேதிவரை நீடிக்கும். அதன் பின்னரும் அடுத்து 20 நாட்களுக்கு லேசான பனிப்பொழிவு இருக்கும்.
ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உறைபனி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
இதன் விளைவாக காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பகுதியை மாநிலத்தின் பிறபகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் பகுதியில் நேற்றிரவு 1.3 செல்சியஸ் அளவுக்கு பனி பெய்தது. தெற்கு காஷ்மீர் பகுதியில் 1.2 செல்சியஸ் அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.
இந்நிலையில், கங்ரூ, ரம்சூ, பன்டியால், அனோக்கி, ரம்பான் ஆகிய மாவட்டங்கள்வழியாக செல்லும் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்றிரவில் இருந்து அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு இவ்வழியாக வாகனப் போக்குவரத்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #JammuSrinagarNH
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் தொடங்கி 40 நாட்கள்வரை உச்சகட்டமான பனிப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டின் அதிகபட்சப் பனிப்பொழிவு வரும் 31-ந் தேதிவரை நீடிக்கும். அதன் பின்னரும் அடுத்து 20 நாட்களுக்கு லேசான பனிப்பொழிவு இருக்கும்.
ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உறைபனி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
இதன் விளைவாக காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பகுதியை மாநிலத்தின் பிறபகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாலத்தை உறைபனி மூடியதால் கடந்த 5 நாட்களாக இப்பகுதி வழியாக போக்குவரத்து முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இரு பகுதிகளின் வழியாக சரக்கு கொண்டு செல்ல வேண்டிய சுமார் 1500 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர் பகுதியில் நேற்றிரவு 1.3 செல்சியஸ் அளவுக்கு பனி பெய்தது. தெற்கு காஷ்மீர் பகுதியில் 1.2 செல்சியஸ் அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.
இந்நிலையில், கங்ரூ, ரம்சூ, பன்டியால், அனோக்கி, ரம்பான் ஆகிய மாவட்டங்கள்வழியாக செல்லும் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்றிரவில் இருந்து அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு இவ்வழியாக வாகனப் போக்குவரத்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #JammuSrinagarNH
காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 270 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவால் வாகன போக்குவரத்து முடங்கியது. #Landslide #JammuHighway #SrinagarHighway
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இருமுக்கிய தலைநகரங்களான ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையிலான முக்கிய நெடுஞ்சாலையாக 270 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை இருந்து வருகிறது.
இப்பகுதியில் பெய்துவரும் உறைப்பனியால் கடந்த புதன்கிழமையில் இருந்து இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது. இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் நடு வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர், நேற்றிலிருந்து ஒருவழிப் பாதையில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த நெடுஞ்சாலைக்கு உட்பட்ட கங்ரூ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் இன்று காலை 11 மணியில் இருந்து மீண்டும் வாகனங்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
அங்கு சாலையின் குறுக்கே குவிந்திருக்கும் மண்மேட்டை அகற்றும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. #Landslide #JammuHighway #SrinagarHighway
×

X