search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jan Suraj Party"

    • இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது.
    • எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சினை இல்லை.

    பாட்னா:

    அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கான யுக்திகளை தாங்களே வகுத்துக்கொண்டு இருந்தன. தற்போது தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் வந்துவிட்டன. அதுபோன்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருபவர்தான் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.

    பல்வேறு மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த கட்சிகளையும் வெற்றி பெறவைத்துள்ளார். அதற்காக அவர் பெறும் கட்டணம் குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்து வந்தன.

    இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    ஆரம்பத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் பயணித்து வந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகினார். தற்போது ஜன சுராஜ் (மக்கள் நல்லாட்சி) என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

    பீகாரில் வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். பெலகஞ்ச் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள உங்களுக்கு (பிரசாந்த் கிஷோர்) நிதி எப்படி கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா. நான் தேர்தல் வியூக வகுப்பாளர். அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வகுத்து கொடுத்தால் அந்த கட்சியிடம் இருந்து கட்டணமாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக பெற்று இருக்கிறேன்.

    இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது. எனவே எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சினை இல்லை. இந்த இடைத்தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக (ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம்) வேட்பாளர்களை நிறுத்தியுள்ளேன். அவர்களை வெற்றிபெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்
    • பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது.

    அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று ஜென் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

     

    2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்தியப் பிரதமர் ஆவதில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது மோடி குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்று வருகிறது.

    கட்சி தொடக்க விழாவின்போது அவர் பேசியதாவது, குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் அவரது பேச்சுகளைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தோம்.

     

    ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது. பீகார் மக்கள் வேலை வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்தால் பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.
    • இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன் என்றார்.

    பாட்னா:

    நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டது.

    பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்துக் கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெறமுடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெறமுடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெறமுடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.

    இதுதொடர்பாக கிஷோர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேச மாட்டேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் களமிறங்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    ×