என் மலர்
நீங்கள் தேடியது "jana sena"
- 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
- 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.
- இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
- கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
ஆந்திராவில் ஜன சேனா கட்சியை தொடங்கியவர் நடிகர் பவன் கல்யாண், இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போடியிட்டார். அதே தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பாக வங்கா கீதா விஸ்வனாதம் போட்டியிட்டார்.
தற்போதைய நிலையில் பவன் கல்யாண் 80,161 வாக்குகளை பெற்றுள்ளார். வாங்கா கீதாவை விட 44,790 வாக்கு வித்தியாச்சத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இதை கொண்டாடும் வகையில் பவன் கல்யாண் தற்பொழுது நடிக்கவிருக்கும் தே கால் ஹிம் ஓஜி (They Call Him OG) திரைப்படம் சார்பாக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டரில் நெருப்பு பற்றி எரியும் சாரில் பவன் கல்யாண் மிக ஸ்டைலாக உட்கார்ந்து இருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார்.
- நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார். இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். காட் ஃபாதர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. சிரஞ்சீவியின் சகோதரர், நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.
தேர்தலில் அவரது ஜன சேனா கட்சி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக பவன் கல்யாணும் பதவியேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் பதவியேற்பும் நடைபெற்றது.
இதுகுறித்து இயக்குநர் மோகன் ராஜா வாழ்த்து கூறி அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் "பவன் கல்யான் காரு மற்றும் சிரஞ்சீவி காரு- க்கும் இடையே இருக்கும் பந்தத்தை காண நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். எதிர்கால நோக்கம் கொண்ட தலைவர். எதிர்காலம் நல்ல நபரின் கைகளில் தான் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் மோகன் ராஜா இயக்கவிருக்கும் சிரஞ்சீவி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா சட்ட சபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆட்சியை பிடிப்பதில் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டப்பேரவை தேர்தலில் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜீவாக்கா, மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது இது அறிவிக்கப்பட்டது.

பவன் கல்யாண் கடந்த 2014 தேர்தலில் தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது அவர் இந்த இரு கட்சிகளையும் எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PawanKalyan
