search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jana Sena Party"

    • நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
    • ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

    ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.

    புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

    தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்ததோடு, போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஜன சேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜன சேனா கட்சி பணிகளில் இருந்து ஜானி ஒதுங்கி இருக்க வேண்டும். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • தேர்தல் அறிக்கை மூலம் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டதாக ஆந்திராவில் சர்ச்சை எழுந்தது.
    • ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெருமளவில் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பா.ஜ.க. தெலுங்கு தேசம் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்லவும் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்லவும் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி பங்கேற்கவில்லை. தேர்தல் அறிக்கை மூலம் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டதாக ஆந்திராவில் சர்ச்சை எழுந்தது.

    ஆனால் பா.ஜ.க இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறுகையில்:-

    ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பாஜகவின் முழு ஆதரவு உள்ளது என்றார்.

    மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெருமளவில் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இதன் மூலம் கூட்டணி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் பிராஜகளம் பொதுக்கூட்டம் இன்று மாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் பால்நாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க., ஜன சேனா கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த பொதுக் கூட்டத்தில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, பொதுக் கூட்டத்தை பார்க்க வந்த தொண்டர்களில் சிலர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர். இதை பார்த்ததும் பிரதமர் மோடி செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

     


    ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையின் போது தொண்டர்கள் மின்கம்பத்தில் ஏறுவதை பார்த்த பிரதமர் மோடி, உடனே குறுக்கிட்டு பவன் கல்யாணிடம் உரையை நிறுத்துமாறு கூறினார். தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அவர்களை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்க வலியுறுத்தினார்.

    "அங்கு மின் வயர்கள் உள்ளன. அங்கு என்ன செய்கின்றீர்கள்? உங்களது உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது. தயவு செய்து கீழே இறங்குங்கள். ஊடகத்தினர் உங்களது புகைப்படங்களை எடுத்துள்ளனர். இப்போது கீழே வாருங்கள். அங்கிருக்கும் காவலர்கள், தயவு செய்து மக்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எங்களுக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்திவிடும்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பிறகு, ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தனது உரையை முடித்தார்.

    தெலுங்கு முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன்கல்யாணுக்கு ரூ.52 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PawanKalyan
    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    தெலுங்கு முன்னணி நடிகர் பவன்கல்யாண் அங்கு ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறார்.

    பவன்கல்யாண் கஜுவாகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவர் நேற்று மனுதாக்கல் செய்தார்.

    அவர் தனது மனுவில் ரூ.52 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். அதில் ரூ.12 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.40 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அசையும் சொத்துக்களில் தனது மனைவி பெயரில் ரூ.30 லட்சம் சொத்தும், தன்னை சார்ந்தவர்களிடம் ரூ.1 கோடியே 51 லட்சம் சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் மனைவி பெயரில் ரூ.40 லட்சம் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் ரூ.72 லட்சம் மதிப்புள்ள பென்ஸ்கார், ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள வால்வோ கார், ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஹார்லே டேவிட்சன் கார் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.27 லட்சத்துக்கு தனது பெயரிலும், ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மனைவி பெயரிலும் நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் தனக்கு ரூ.33 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். 2013-14-ல் பவன்கல்யாண் தனக்கு ரூ.7 கோடியே 32 லட்சம் வருமானங்கள் இருந்ததாக வருமானவரி கணக்கில் தாக்கல் செய்துள்ளார். #PawanKalyan
    ×