என் மலர்
நீங்கள் தேடியது "JanaSena Party"
- அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.
- பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
திருமலை:
ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடும் என தெரிகிறது.
அதற்கேற்ப அக்கட்சியின் தலைவரான நடிகர் பவன்கல்யாண் நேற்று முன்தினம் தனது வாராஹி யாத்திரை தொடங்கினார்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கிநாடா அருகே உள்ள கத்திப்புடி பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவரது 'வராஹி' எனப்படும் பிரத்யேக நவீன வசதியுடன் கூடிய வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நானும் ஒருவன். சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் வெறும் நடிகனாக மட்டுமே இருக்க முடியும்.
ஆனால் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். எனது பிள்ளைகளுக்காக சேர்த்த சொத்துக்களை விற்று கட்சி தொடங்கி நடத்தி வருகிறேன்.
தற்போதைய ஆந்திர முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் எனது தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து விமர்சிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.
தேவைப்பட்டால் முதல்வராக அமர்வேன். கூட்டணியுடன் வருவேனோ அல்லது தனித்து வருவேனோ என சில மாதங்களில் தெரிந்து கொள்வீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பவன்கல்யாண் மற்றும் பாஜக கூட்டணியுடன் ஆட்சியை பிடிக்க சந்திரபாபு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அந்த கட்சிகளுக்கு 80 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இதுபோன்ற பிரசாரத்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்.
- பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.
ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதையொட்டி பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் ஓய்வு இன்றி கடும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது நடிப்பில் ஓ.ஜி, உஸ்தாத் பகத்சிங், ஹரிஹர வீரமல்லூர் ஆகிய 3 படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்களை முடித்துக் கொடுக்க முடியாமல் உள்ளார்.
இந்நிலையில் பவன் கல்யாண் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட 3 படங்களையும் முடித்துக் கொடுக்க நேரம் ஒதுக்க வேண்டுமென பவன் கல்யாணிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் அவரது தரப்பில் படப்பிடிப்பிற்கு நேரமில்லை என கூறுகின்றனர்.
- எனது தம்பி பவன் கல்யாண் தனது சொந்த பணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
- அவரை ஊக்கப்படுத்த என்னுடைய பங்காக இந்த நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கி உள்ளேன்‘’ என்றார்.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா கட்சி நடத்தி வருகிறார். தற்போது பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் 'விஸ்வம்பரா' படப்பிடிப்பில் இருந்த நடிகர் சிரஞ்சீவியை, நடிகர் பவன்கல்யாண், ஜனசேனா கட்சி பொதுசெயலாளரும், சிரஞ்சீவியின் இன்னொரு தம்பியுமான நடிகர் நாகபாபு சந்தித்தனர்.

அப்போது அவர்களை அன்போடு படப்பிடிப்பு தளத்தில் சிரஞ்சீவி வரவேற்றார். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி கொண்டனர். அதன் பின் நடிகர் சிரஞ்சீவி ரூ. 5 கோடிக்கான காசோலையை ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணிடம் நன்கொடையாக வழங்கினார்.
இது குறித்து சிரஞ்சீவி கூறும்போது ''பலர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், எனது தம்பியான பவன் கல்யாண் தனது சொந்த பணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த சேவை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.மேலும் அவரை ஊக்கப்படுத்த என்னுடைய பங்காக இந்த நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கி உள்ளேன்'' என்றார்.
- ஜனசனா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
- ஆந்திர அமைச்சரவையில் ஒரு மந்திரி பதவி இடம் காலியாக உள்ளது.
திருப்பதி:
ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரா துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் சகோதரர் நாகு பாபு. இவர் ஜனசனா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
தனது சகோதரரை ஆந்திர அமைச்சரவையில் மந்திரியாக்க வேண்டும் என பவன் கல்யாண் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே ஆந்திர அமைச்சரவையில் ஒரு மந்திரி பதவி இடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள பதவியில் நாக பாபுவை மந்திரியாக்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஜனசேனை கட்சி சார்பில் ஆந்திர மாநிலம் ஏழூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது:-
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குள் என்னை கொல்ல சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் பேசி இருக்கும் ஆடியோ எனக்கு கிடைத்துள்ளது. அவர்கள் யார் என்பதும் அவர்களின் முகமும் எனக்கு தெரியும்.
என்னை கொலை செய்துவிட்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு அது மறந்துவிடும் என்றும் கருதுகிறார்கள்.
பல ஆயிரம் கோடி பணம் இருந்தால் அரசியலில் ஜெயிக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி என்றால் ஆந்திராவில் கடந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஜெயித்திருக்க வேண்டும். முகேஷ் அம்பானி பிரதமர் ஆகி இருக்க வேண்டும். அரசியலில் ஜெயிப்பதற்கு மக்கள் ஆதரவுதான் முக்கியம். அது எனக்கு உள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு கருத்து கணிப்பில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு 43 சதவீதமும், சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதமும் உள்ளது. எனக்கு 5 சதவீதம் மக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். #PawanKalyan