search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "japan pm"

    • ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பயண ரத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பயண ரத்துக்கான காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

    சமீபத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது அவரை ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புமியோ கிஷிடா அழைப்பு விடுப்பார்.
    • ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் மே மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 19ம் தேதி இந்தியா வர திட்டமிட்டுள்ள அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    அப்போது பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இது தொடர்பாக நிக்கி ஏசியா ஊடகம் கூறும்போது, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வருகிற 19ம் தேதி முதல் 3 நாட்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த ஆண்டு ஜி-7 மற்றும் ஜி-20 தலைவர்களாக ஜப்பானும், இந்தியாவும் இணைந்து செயல்படுவார்கள் என்பதை இந்திய பிரதமர் மோடியுடன் உறுதிப்படுத்த புமியோ கிஷிடா ஆர்வமாக உள்ளார்.

    ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் மே மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில், மற்ற நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த புமியோ கிஷிடா விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது அவரை ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புமியோ கிஷிடா அழைப்பு விடுப்பார்.

    மோடி- புமியோ கிஷிடா சந்திப்பின்போது ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படு கிறது.

    • டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
    • முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே (63), ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. ஷின்சோ அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் பாசமிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, ஜப்பான் அரசு ஏற்பாடு செய்திருந்த ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். அதன்பின், இருநாட்டு தலைவர்களும் பேசினார்கள்.

    முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து அவர் ஜப்பான் பிரதமரை சந்தித்தார்.

    இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

    • டோக்கியோ விமானநிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
    • ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை நினைவுகூர்கிறது இந்தியா.

    ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது63). கடந்த ஜூலை மாதம் இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார். பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த இரங்கல் செய்தியில் பாச மிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இன்று ஜப்பான் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதை ஏற்று பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலை வர்களும் பேசினார்கள்,

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இந்த சந்திப்பு நடந்தது. கடந்த முறை ஜப்பான் வந்த போது நீண்ட நேரம் அபேயுடன் உரையாடினேன். இந்தியா அவரை இழந்து தவிக்கிறது. அவர் இல்லாதததை இந்தியா உணர்கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.
    • ஷின்ஸோ அபே, சுயநினைவின்றி இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஜப்பான் ஊடகம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

    ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணி அளவில் அவர் மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். ஏராளமான பொதுமக்கள் இந்த பிரசார கூட்டத்துக்கு திரண்டு வந்து ஷின்சோ அபேயின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் ஷின்சோ அபேயை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டான். அந்த குண்டு அவரது மார்பில் பாய்ந்தது. இதனால் ஷின்சோ அபே தனது நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே சரிந்தார்.

    உடனே அவரது பாதுகாவலர்கள் அவரை நோக்கி வேகமாக ஓடினார்கள். அதற்குள் அவர் கீழே விழுந்தார். அவரது மார்பு பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி சட்டை முழுவதும் ரத்தம் காணப்பட்டது.

    உடனே அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அவரை உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உடனடியாக டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கூட்டத்தில் முதலில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது குண்டு பாய்ந்ததை அறிந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த உடனே துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனது பெயர் யமாஹமி (வயது 41). அவன் அருகில் நின்றபடியே ஷின்சோ அபேயை துப்பாக்கியால் சுட்டான்.

    இதற்காக அவன் சிறியரக கைத்துப்பாக்கியை பயன்படுத்தினான். யமஹாமி துப்பாக்கியால் சுட்டதை அங்கு நின்றுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் தான் பார்த்துள்ளார். அவர்தான் அவனை போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

    ஷின்சோ அபேயை, யமாஹாமி எதற்காக சுட்டான்? அவன் எப்படி பொதுக்கூட்ட மேடை அருகே வந்தான் என்பது தொடர்பாக போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

    ஷின்சோ அபே சுடப்பட்ட தகவல் அறிந்ததும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷ்கிடாவும், மந்திரிகளும் டோக்கியோவுக்கு திரும்பியுள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட சம்பவம் ஜப்பான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியா - ஜப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் இன்று கையொப்பமிட்டனர். #ModiShinzoAbe #IndiaJapanMoUs
    டோக்கியோ:

    இருநாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே முப்படைகளின் அணிவகுப்புடன் கூடிய அரசு மரியாதையுடன் இன்று சிறப்பான வரவேற்பு அளித்தார்.

    பின்னர் 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற இருநாட்டு தலைவர்களும் ஆசிய-பசிபிக் நாடுகளில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினர்.

    இந்தியா-ஜப்பான் நட்புறவை பலப்படுத்தும் வகையிலும் உலக நாடுகளின் அமைதி மற்றும் நிரந்தரத்தன்மையை நிலைநாட்டும் வகையிலும் இனி இந்தியா-ஜப்பான் நாடுகளுன் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் ஆண்டுதோறும் சந்தித்துப் பேசுவார்கள் என இன்றைய ஆலோசனையின்போது தீர்மானிக்கப்பட்டது.

    சைபர்தளம், மின்னணுவியல், சுகாதாரம், ராணுவம், கடல் மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்தியா-ஜப்பான் நட்புறவின் அடையாளமான மும்பை-அகமதாபாத் இடையிலான அதிவிரைவு ரெயில் திட்டப் பணிகளை விரைவுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

    இருநாடுகளுக்கு இடையிலான கடற்படை தொடர்பான கூட்டுறவை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மோடியும், ஷின்ஸோ அபேவும் கையொப்பமிட்டனர்.

    இந்தியா-ஜப்பான் இடையிலான பணப்பரிமாற்றத்துக்கு வசதியாக 7500 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை இருநாடுகளும் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தமும் கையொப்பமானது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் ஷின்ஸோ அபேவுடன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்தியாவில் 250 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்ய ஜப்பான் தொழிலதிபர்கள் தற்போது முன்வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

    பின்னர், தனது ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி (இந்திய நேரப்படி) இன்று மாலை 6 மணியளவில் தனிவிமானத்தில் டோக்கியோவில் இருந்து டெல்லி புறப்பட்டார். #ModiShinzoAbe #IndiaJapanMoUs
    ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன்மூலம், அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். #JapanPM #ShinzoAbe
    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே (வயது 63) கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் பிரதமராக முடிவு செய்த அபே, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதற்கான வேலைகளை தொடங்கினார். இந்நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அபே மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஷிகேரு இஷிபா களமிறங்கினார்.


    தேர்தல் முடிவில், ஷின்சோ அபே வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக கட்சி எம்பிக்கள், உறுப்பினர்கள் என மொத்தம் 553 பேர் வாக்களித்தனர். ஷிகேரு இஷிபா 254 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் ஷின்சோ அபே மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். இதற்காக அந்நாட்டு அரசியல் சாசனத்தை திருத்தம் செய்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இதன்மூலம் நீண்டகாலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையை ஷின்சோ அபே பெறுவார். இதற்கு முன்பு டாரோ கத்சுரா 1901 முதல் 1913 வரை மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #JapanPM #ShinzoAbe
    2012-ம் ஆண்டு முதல் ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Japan #ShinzoAbe
    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் பிரதமராக விருப்பப்பட்டுள்ள அபே, தற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். வரும் 20-ம் தேதி கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அபேவின் போட்டியாளரும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியுமான ஷிகேரு இஷிபா களமிறங்க உள்ளார்.

    கட்சியில் 70 சதவிகித ஆதரவு அபேவுக்கு இருக்கும் காரணத்தால் அவர் எளிதாக வெற்றி பெருவார் என கூறப்படுகிறது. அப்படி வெற்றி பெரும் பட்சத்தில், அந்நாட்டு அரசியல் சாசனத்தை திருத்தம் செய்து மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
    ×