என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jealousy"
- மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
- அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும்.
இன்று நம்மில் பலர், பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, குர்ஆன் ஓதுவது, ஹஜ்ஜை நிறைவேற்றுவது போன்ற கடமைகளை செய்தாலே போதும், சுவனம் சென்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், சக மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து, அன்பு, நேர்மை, நீதி ஆகிய நற்பண்புகளை வளர்த்து, போட்டி, பொறாமை, புறம், நம்பிக்கை துரோகம், சூழ்ச்சி போன்ற அல்லாஹ் வெறுக்கக்கூடிய செயல்களை வெறுத்து வாழ்ந்து, தங்கள் குழந்தைகளுக்கும் அதனையே கற்றுக்கொடுப்பதே சிறந்தது.
மற்ற மனிதர்களிடம் நடந்து கொள்ளும் முறைக்கு அல்லாஹ்விடம் கேள்வி, கணக்கு கடுமையாக இருக்கும். ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் `வறியவர் யார்?' என்று கேட்கப்பட்டபோது, `இம்மையில் மூட்டை, மூட்டையாக நன்மைகளை சேர்த்து விசாரணைக்காக ஒருவர் வருவார். அவருடைய நன்மைகளில் இருந்து அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்கப்படும்.
அதாவது இம்மையில் மற்றவர்களை திட்டி இருப்பார், அவதூறு கூறியிருப்பார், உரிமைகளைப் பறித்திருப்பார், அல்லது அநீதம் இழைத்திருப்பார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி கொடுக்க நன்மைகள் எதுவும் இல்லை எனும் நிலை வரும்போது அவர்களின் பாவங்கள் அந்த நபர் மீது சுமத்தப்படும். அவரது ஈடேற்றத்திற்கு ஒன்றுமே இருக்காது. இறுதியில் அவர் நரகில் தூக்கி வீசப்படுவார்', இவர்தான் வறியவர் என்று கூறினார்கள்.
அண்டை வீட்டினர் அந்நியராக இருந்தாலும் அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்லும் மார்க்கமாக இருக்கும் இஸ்லாம், அநீதி இழைக்கும் மக்களைப் பற்றியும், அநீதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் நிலைமை பற்றியும் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான், 'நான் அநீதியை என் மீது ஹராமாக்கிக் கொண்டேன். எனவே நீங்களும் உங்களுக்குள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். அநீதியின் காரணமாக கியாமத் நாளில் இருள் சூழ்ந்துகொள்ளும். அப்பொழுது ஈடேற்றம் பெறுவதற்கான வழியே இருக்காது'.
ஒருவரை ஆளுநராக நியமித்து அனுப்பும் பொழுது, நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி இவ்வாறு அறிவுரை பகர்வார்கள், 'அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவிற்கும், இறைவனுக்கும் எந்த வித தடையும் இருப்பதில்லை'.
'அநீதி இழைக்கப்பட்டவர் பாவியாக இருந்தாலும் அவரின் துஆ அவசியம் ஏற்கப்படும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள், 'எவருடைய நாவின் தீங்கிலிருந்தும், கரங்களின் தீங்கிலிருந்தும் பிற மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவரே முஸ்லிம்'. நாம் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டுமே தவிர, நம்மால் மற்றவர்களுக்கு தொந்தரவோ, கெடுதலோ, அநியாயமோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அநியாயம் என்று தெரிந்தும், அதைத் தட்டிக் கேட்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகளே.
`முஃமின்கள் யார்' என்று கேட்கப்பட்டது. `யாரைப் பார்த்து பிறர் பயமற்று இருக்கிறார்களோ அவர்கள் தான் முஃமின்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இன்று போகிற போக்கில் தங்கள் சொல்லாலும், செயலாலும் பிறருக்கு துன்பத்தைத் தரக்கூடிய மக்களை நாம் பார்க்கிறோம்.
சரி, இறைவன் வெறுக்கக்கூடிய காரியங்களில் இருந்து நம்மை முழுவதுமாக விலக்கிக் கொள்வது எப்படி?
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே என்றால், நிச்சயம் நமது செயல்கள் எல்லாம் நற்செயல்களே.
இரண்டாவதாக நம்முடைய வணக்க வழிபாடுகளில் உள்ளத்தூய்மையும், இறைவன் எனக்கு மிகச் சமீபமாக இருந்து என்னுடைய அத்தனை செயல்களையும் உற்று நோக்குகிறான் என்ற அச்சமும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட அச்சம் என்றால், இறைவனைக் குறித்தான பயத்தில் தானாகவே கண்ணீர் வர வேண்டும். தொழுகையில் மட்டுமல்ல, பகலிலும், இரவிலும், குர் ஆன் ஓதும் பொழுதும், ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாலும், சும்மா இருந்தாலும் உள்ளச்சத்ததோடு உங்களைப் படைத்த இறைவனை நினைவு கூருங்கள்.
இறைவன் நம்முடைய வணக்க வழிபாடுகளையும், மற்ற நற்குணங்களையும் பொருந்திக் கொள்வானாக. நம்முடைய பாவங்களையும் மன்னித்து, குடும்பம், குடும்பமாக சுவனத்தில் நுழையக் கூடியவர்களாக நம்மை ஆக்கி, அவனின் திருமுகத்தைப் பார்க்கக் கூடிய பெரும் பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!
- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
- திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறச்சி:
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய துணைக்கண்டத்தின் சிறப்புமிகு மாநிலமாக தமிழகத்தை தலை நிமிர்த்தி மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் உதாரணமாக திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி சம சீராக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு ஆகியவை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனை நடுநிலையாளர்களும் ஒத்துக்கொள்வார்கள். அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வரும் ஆதரவு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் காணப்படும் வரவேற்பு குறிப்பாக இளைஞர்களிடையே காணப்படும் எழுச்சி இவற்றைக் கண்டு எதிர்க்கட்சியினர் பொறாமை கொண்டு சேர்க்கை வாரி தூற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரம் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. மாறாக எள்ளி நகையாடும் அளவிற்கு எதிர்க்கட்சி களின் செயல்பாடு களை விமர்சித்து வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் தீட்டப்படும் திட்டமானது மாநிலத்தின் வளர்ச்சி அதன் மூலம் தமிழக மக்களின் பொருளாதார மேம்பாடு என்ற ஒரே நோக்குடன் செயல்படுத்தி வருவதால் இன்னும்2 ஆண்டுகளில் தமிழகம் அபரீத வளர்ச்சி பெறும். அந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மாவட்ட மக்களின் நல வாழ்வு மேம்பாட்டுக்கும் கேட்கும் அனைத்து திட்டங்களையும் மற்றும் நிதி உதவிகளையும் வழங்கி வருவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமித்து வளர்ச்சி பணியை துரிதப்படுத்தி வருகிறார். மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலை விட கள்ளக்குறிச்சி மாவட்ட த்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். கொள்கிறேன்.இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்