என் மலர்
நீங்கள் தேடியது "jeeva"
- குற்றம் கடிதல் 2 படத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்குகிறார்.
- படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகிறது.
திரைப்பட விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என பல்வேறு துறைகளில் இயங்கி வருபவர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார். இவர் 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற திரைப்படம் "குற்றம் கடிதல்."
ஜே.எஸ்.கே. தயாரிப்பில் உருவான 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ்.கே. ஜீவா எழுதி இயக்குகிறார். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படம் குறித்து பேசிய ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், "கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
'குற்றம் கடிதல் 2' படத்தின் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது. இதர நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை.
- படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியை நடிகர் ஜீவா பார்வையிட்டார். தொடர்ந்து நடிகர் ஜீவா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கலைஞரை பற்றி சினிமாவில் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். கண்காட்சியை பார்க்கும் போது சினிமாவை தாண்டி முதல்-அமைச்சராக அவர் செய்துள்ளதை கண்டு வியந்து போனேன்.
கலைஞர் வரலாறு படமாக்கப்பட்டால் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீவா, "நிச்சயமாக அந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை. கலைஞர் வரலாற்றை படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும். அதை பா.விஜய் இயக்குவார் என நினைக்கிறேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தாரகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்".
- முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது
Thaaragai cinemas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது....
,இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார் ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார்.
நடிகர் ஜீவா பேசியதாவது...
பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். என்று நகைச்சுவையாக பேசியுள்ளனர்.
யூடியூபில் டிரெண்டான திருச்சி சாதனா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அரசியல் கருத்துகளை முன் வைக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. Thaaragai cinemas பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தை, ஸ்வேதா காசிராஜ் இணை தயாரிப்பு . செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சிவா மனசுல சக்தி [SMS]
- தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் படத்தை இயக்கி முடித்துள்ளார்
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சிவா மனசுல சக்தி [SMS]. ஹீரோயினாக நடித்த அனுயா, தாயாக நடித்த ஊர்வசி என அனைவரும் கதாபாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்திய இப்படம் எதார்த்தமான கதைக்களத்துடன் ஃபீல் குட் படமாக அமைத்திருந்தது.

ஜீவா - சந்தானம் காம்பினேஷனில் காமெடி டிராக்கையும் இயக்குனர் ராஜேஷ் வொர்க்அவுட் செய்திருப்பார். இதனைத்தொடர்ந்து 2010 இல் ஆர்யா- சந்தானம் காம்போவை வைத்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை அதே பாணியில் எடுத்து ஹிட் கொடுத்தார் ராஜேஷ்.
தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ராஜேஷ் பிசியாக இயங்கி வருகிறார்.
இந்த சூழலில் சிவா 'மனசுல சக்தி 2' படத்தை எடுக்கும் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ராஜேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். SMS 2 படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும், நடிகர் ஜீவாவிடமும் இது பற்றி பேசி இருப்பதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளது SMS ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்தது.
- இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
2012 அம ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற திரைப்படம் வெளியானது.
இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில், இன்றுடன் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை ஒட்டி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்த போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் இசை எனக்காவும், நமக்காகவும், இந்த மொத்த உலகத்துக்காகவும் இளையராஜா கொடுத்த அன்பின் வெளிப்பாடு!" என்று கவுதம் வாசுதேவ் மேனன் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது
- இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
- சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
- இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலான.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகினர் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குனர் சுந்தர்.சி பேசியதாவது, "நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது இந்த முறை காபி வித் காதலில் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்த படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்
.

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மா தான் டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம் அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம் தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம் நானும் யோகிபாபு பேசிக்கொள்ளும்போது கூட அந்த குழந்தையின் அப்பா அம்மா நமக்காகவே பெற்றுவிட்டு இருக்காங்களோ என்று பேசிக்கொள்வோம்
.

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்" என்றார்.
- சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
- இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

காபி வித் காதல்
இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலான.

காபி வித் காதல்
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகினர் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் ஜீவா பேசியதாவது, "சுந்தர்.சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார். எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார்.

ஜீவா
அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம். எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதை சரியாக செய்துள்ளேன்" என்றார்.
- சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

காபி வித் காதல்
இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

காபி வித் காதல்
அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஜெய், ஜீவா இருவரும் ஒரே பெண்ணை காதல் செய்வது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.
- விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் ஜீவாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜாகான், லவ் டுடே, திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
- அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.
அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் "தியாகி பாய்ஸ்" பாடலை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யுவன் மற்றும் ஹிப் ஹாப் ஆதி குரலில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
- அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது.
அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

காபி வித் காதல்
இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடல் "தியாகி பாய்ஸ்" ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Get ready to vibe to #ThiyagiBoys,new single from #CoffeeWithKadhal 😎🔥
— KhushbuSundar (@khushsundar) August 5, 2022
Out on August 8th! #ASundarCEntertainer 🥳
A @thisisysr Musical! 🎼#SundarC #AvniCinemax #BenzzMedia @U1Records @JiivaOfficial @Actor_Jai @Act_Srikanth @ImMalvikaSharma @Actor_Amritha @DhivyaDharshini pic.twitter.com/oq00ZeMvK1