என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jharkand"
- ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றினார்
- அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றி அவரின் கால் சட்டையை மற்றொருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சதீஸ் சந்திர தூபே தன்பாத் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றை பார்வையிட சிறப்பு உபகரணங்கள் அணிந்து தயாராகியுள்ளார்.
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றி அவர் அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து பணிவிடை ஆற்றியுள்ளார்.
அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்து வருகிறது. பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதாக தன்பாத் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
55 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் செய்யமுடியாத முன்னேற்றத்தை, எங்கள் பாஜக ஆட்சி 55 மாதங்களில் செய்து முடித்திருக்கிறது. 5 ஆண்டுகளில் கரை படியாத நேர்மையான ஆட்சியினை பாஜக நடத்தி இருக்கிறது. மேலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நான் இதை கோவில் நகரமான தியோகார் பகுதியில் இருந்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன்.
இது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்