search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JioAirFiber plan"

    • ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது.
    • இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

    ஜியோ ஒரு புதிய ஃப்ரீடம் ஆஃபரை (Freedom Offer) அறிவித்துள்ளது. அதில் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களில் 30 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.

    ஜியோ அதன் ஜியோ ஏர் ஃபைபர் (JioAirFiber) திட்டங்களில் புதிய இலவச சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெறுவோருக்கு 30 சதவீதம் தள்ளுபடியை ஜியோ வழங்குகிறது. இதன் மூலம் ரூ.1000 கட்டண சலுகையை வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை புதிய பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

    நீங்கள் ஏற்கனவே இருக்கும் ஜியோ ஏர் ஃபைபர் பயனராக இருந்து, புதிய திட்டத்தை வாங்கினால் அல்லது வேறொரு திட்டத்தை மேம்படுத்தினால், நீங்கள் இந்த ஆஃபருக்குத் தகுதிபெற மாட்டீர்கள். ஜியோ வழங்கும் 30 சதவீத தள்ளுபடியானது ரூ.1,000 இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகும். மேலும் இது புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    நீங்கள் இப்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவைக்கு முன்பதிவு செய்திருக்கிறீர்கள், இன்னும் உங்களுக்காக பிராட்பேண்ட் இணைப்பு இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த சலுகையை பெறலாம்.

    இலவச சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 15 வரை வழங்கப்படுகிறது.

    ×