search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JioCinema"

    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
    • ஒற்றை ஒடிடி இயங்குதளத்தை இயக்குவது செலவுகளைச் சேமிக்க திட்டம்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதன் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோ சினிமாவுடன், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 இணைப்பிற்குப் பிறகு இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விளைவாக மூத்த பங்குதாரராக ஆவதற்கு ஒரு லாபகரமான பேரம் நடத்தி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தைகளில் ஒன்றான லீடர்போர்டில் தன்னைத்தானே முன்னிலைப்படுத்தியுள்ளது.

    ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், வயாகாம் நிறுவனத்தின் ஊடகச் செயல்பாடுகள், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் ஸ்டார் இந்தியா உடன் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    இதையடுத்து ரூ. 70,352 கோடி மதிப்புள்ள இந்த கூட்டு முயற்சியில், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் அதன் வளர்ச்சி ஆதரிக்க முயற்சியில் ரூ.11,500 கோடி செலுத்தும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 ஆகியவற்றின் இணைப்பிற்குப் பிறகு ஜியோ சினிமாவை டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒற்றை ஒடிடி இயங்குதளத்தை இயக்குவது செலவுகளைச் சேமிக்கவும், யூடியூப், நெட்ப்ளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற தளங்களுக்கு வலுவான போட்டியை அளிக்கவும் உதவும் என்பதால் இந்த நடவடிக்கை சாத்தியமாகும் என கூறப்படுகிறது.

    • இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.
    • போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    டாடா ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக ஜியோசினிமா தெரிவித்து உள்ளது.

    ஜியோசினிமா செயலியில் டாடா ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. எனினும், இடையில் மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நள்ளிரவில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    நள்ளிரவு 1 மணி அளவிலும் ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். இதன் மூலம் ஜியோசினிமா, நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2019 ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியினை அதிகம் பேர் பார்த்தனர்.

    கடந்த மே 23-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியினை 2.5 கோடி பேர் பார்வையிட்டது அதிகமாக இருந்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது. 

    ×