என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "JJP"
- யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.
- இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது
அரியானாவில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக தனித்துக் களம் காண்பதாக காங்கிரஸ் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இந்த முடிவை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதலவர் பகவத் மான் கூட்டாக இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில் அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.
ஆனால் இடையிலேயே பாஜகாவுக்கான ஆதரவை ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா முறித்துக்கொண்டார். சில சுயேச்சைகளும் பாஜகவுடனான ஆதரவை விலகிக் கொண்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் தற்போது ஸ்திரத்தன்மை இலலாமல் அரியானாவில் பாஜக ஆட்சி தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில்தான் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக ஆதரவை முறித்துக்கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் கடந்த தேர்தலைப் போல தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. எனவே பாஜக - காங்கிரஸ் - ஆம்ஆத்மி-ஜேஜேபி ஆகிய நான்கு கட்சிகளின் முனை போட்டி இந்த சட்டமன்றத் தேர்தலில் உருவாகியுள்ளது.
- சைனி தலைமையிலான அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெற்றனர்.
- தற்போது 88 எம்.எல்.ஏ.-க்கள் உள்ள நிலையில், பா.ஜனதா அரசு மைனாரிட்டி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அரியானா மாநிலத்தில் சைனி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வந்த மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் பா.ஜனதாவின் பலம் 43 ஆக குறைந்துள்ளது.
இதனால் பா.ஜனதா மெஜாரிட்டியை இழந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஹூடா தெரிவித்துள்ளார். அதேவேளையில் தங்களுக்கு போதுமான அளவு ஆதரவு இருப்பதாக பா.ஜனதா கூறி வருகிறது.
ஜனநாயக் ஜன்தா கட்சி (ஜேஜேபி) ஆதரவு அளித்தால் பா.ஜனதா ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஜேஜேபி உடனான உறவை பா.ஜனதா முறித்திருந்தது.
இந்த நிலையில் ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, சைனி தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டால், நாங்கள் ஆதரவு அளிப்போம் என துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துஷ்யந்த் சவுதாலா கூறியதாவது:-
சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றால், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை கவிழ்ப்பதற்கு வாக்கு அளிப்பார்கள். ஜேஜேபி கொறடா உத்தரவு பிறப்பித்து அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.
தற்போது மக்களவையில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவரான பூபிந்தர் சிங் ஹூடா, மக்களவை தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோரினால், நாங்கள் அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலனை செய்வோம்.
தற்போது காங்கிரஸ் பா.ஜனதா அரசை கவிழ்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்பதில் தெளிவாக உள்ளோம்.
இவ்வாறு துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். ஜேஜேபி-க்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது அரியானா சட்டமன்றத்தில் 90 இடங்களில் 88 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 45 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பாஜனதாவுக்கு 2 சுயேட்சை எம்எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்