என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Job Opportunities"
- மத்திய அரசு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
- மொபைல் போன் உற்பத்தியில் உலகின் 2-வது பெரிய நாடாக மாறியுள்ளோம்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாரிசு அரசியலை அடிப்படையாகக் கொண்ட எதிர்க்கட்சிகள் இளைஞர்களிடம் இருந்து மிகவும் அந்நியப்பட்டுள்ளன. அதனால் தான் உண்மை நிலவரத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக சாலை, ரெயில் பாதை, மின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகின்றன.
2014-க்கு முன்பு சில நூறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 1.25 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. இதில் 100 நிறுவனங்கள் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பை கொண்டு உலகளவில் யூனிகார்ன் நிறுவனங்களாக உருவெடுத்து உள்ளன. ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் எங்களது புத்திகூர்மையான 20-25 வயதுக்குட்பட்ட பல லட்சம் மகன், மகள்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
கடந்த 6-7 ஆண்டுகளில் மட்டும் 6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதை காலமுறை தொழிலாளர் பங்கேற்பு கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
முன்பு நாம் மொபைல் போன்களை இறக்குமதி செய்தோம். ஆனால் இப்போது மொபைல் போன் உற்பத்தியில் உலகின் 2-வது பெரிய நாடாக மாறியுள்ளோம்.
உலகில் தயாரிக்கப்படும் 7 ஐபோன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டத்தின் வெற்றிக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு புதிய சிங்கப்பூர்களை உருவாக்குவோம்.
இந்தியாவில் தோராயமாக 1,300 தீவுகள் உள்ளன. இந்த தீவுகள் குறித்த பதிவோ, கணக்கெடுப்போ நம்மிடம் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்த நிலையில் விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவற்றை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அதில் சில தீவுகள் சிங்கப்பூரின் அளவுக்கு உள்ளன. எனவே இந்தியாவைப் பொருத்தவரை வரும் காலத்தில் புதிய சிங்கப்பூர்களை உருவாக்குவது கடினமான செயலாக இருக்காது.
பிராண்ட் மோடி என்றால் என்ன? என்று கேட்கிறீர்கள். ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்பது எனக்கு தெரியாது. மோடியின் வாழ்க்கை மற்றும் பணியை மக்கள் பார்க்கிறார்கள். 100 வயதான எனது தாயார் ஹீராபென் தனது கடைசி நாட்களை அரசு மருத்துவ மனையில்தான் கழித்தார். இதில் இருந்து என் வாழ்க்கை சற்று வித்தியாசமானது என்பதை நாடும், நாட்டு மக்களும் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜி.டி.பி. குறித்து பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை.
- உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியாவின் மோசமான நிலை குறித்து பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பட்ஜெட் குறித்து கூறியதாவது:
ஜி.டி.பி. குறித்து பேசிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை.
இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசி உள்ள அவர், உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை தெரிவிக்கவில்லை.
பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி மந்திரி உணவுப் பொருட்களின் விலை 7.7 சதவீதம் வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை.
விவசாயிகள் பற்றி பேசிய நிதி மந்திரி விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை? ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் எதுவும் இந்த பட்ஜெட் உரையில் பேசப்படவில்லை.
புதிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனை கல்லூரிகள் கட்டப்படும் என பேசும் நிதி மந்திரி மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து பேசவில்லை. குறிப்பாக இந்தப் பணியிடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்களாகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2013-14 நிதியாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சியை 6.4 சதவீதம் ஆகவும், சராசரி வளர்ச்சியை 7.5 சதவீதம் ஆகவும் வைத்துச்சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி.டி.பி. வளர்ச்சியை 6 சதவீதத்திற்கு கீழாகக் குறைத்துள்ளது.
இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதி மந்திரி வேலைவாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் கிராமப்புறங்களில் 8.3 சதவீதம், நகர்ப்புறங்களில் 13.8 சதவீதம் வேலையில்லாமல் இருக்கின்றனர். 25 வயதிற்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் 42 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.
30 முதல் 34 வயது வரையிலான படித்த இளைஞர்கள் 9.8 சதவீதம் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நிதிமந்திரி பட்ஜெட் உரையில் கூறவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் கனவுகளை உடைக்கும் வேலையை தான் மத்திய அரசு செய்து வந்துள்ளது என தெரிவித்தார்.
- குறைகேட்பு கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தல்.
- பற்றாக்குறைவாக உள்ள போலீசாரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா கலந்து கொண்டு அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்கொலை, குற்ற சம்பவங்கள், விபத்தில் சிக்குவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தை போலபுதுவையிலும் வாரிசுதாரர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதால் தங்கள் குடும்பத்தை சரிவர கவனித்துக் கொள்ள முடியாமல் போகிறது. எனவே வார விடுமுறை அளிக்க வேண்டும். குரூப் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை தொடங்க வேண்டும். குற்றத்தை குறைக்கும் வகையில் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரத்தில் மின்தடையால் பணிகள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையத்திற்கு என இன்வெர்ட்டர், ஜெராக்ஸ் மிஷின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் தொகை அதிகரிப்பாலும் குற்றச்சம்பவங்கள் நூதன முறையில் நடந்து வருவதால் பற்றாக்குறைவாக உள்ள போலீசாரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு பகுதிக்கென தடுப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கணேசன், இனியவன்,சிவஜான்சன் கென்னடி, சப்- இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், திருமுருகன், போக்குவரத்து போலீஸ் பாஸ்கரன் மற்றும் போலீசார் இருந்தனர்.
- பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
- வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரி களப் பயணம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் சசிக்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகரன், தலைமை ஆசிரியை ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் சீர்காழி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளியில் 12- வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கல்லூரியில் உள்ள நூலகம், வணிகவியல் துறை, அறிவியல் துறை, கணிதத்துறை வகுப்புகளுக்கு சென்று பாடம் கற்பிக்கும் முறைகள் குறித்தும், பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி நிறைவடைந்து கல்லூரி படிப்பில் எந்த துறையை தேர்வு செய்து படிப்பது.
வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து கல்லூரி படிப்பில் சேர்வது உட்பட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்க ங்கள் அளித்தனர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, பிரபாகரன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்