search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "job scheme"

    • தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான். .
    • மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆர்.நடராஜன் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீராணம்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை பாா்வையிட்டு,பெண் தொழிலாளா்களிடம் பணிகள், ஊதியம் மற்றும் அவா்களது குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

    அப்போது அவா் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறாா்கள் என்பதை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தொடக்கியுள்ளேன்.

    இடுவாய் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் மறுக்கப்படாமல் வழங்குவதுடன், நிா்ணயிக்கப்பட்ட ஊதியமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான்.

    அதே வேளையில் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அதேபோல மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.ஆகவே வரும் மக்களவை கூட்டத்தொடரில் 100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை, மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும் என்றாா்.  

    ×