என் மலர்
நீங்கள் தேடியது "Job shift"
- விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.
- ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சியின் ஆணையராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சுரேந்தர் ஷா பொறுப்பேற்றார். அதுமுதல் விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தார். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வரி பாக்கிகளை வசூலிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இதன் மூலம் விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சுரேந்தர் ஷா விழுப்புரம் நகராட்சியில் இருந்து விடைபெற்று, திருவள்ளுவர் நகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.