என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "John F Kennedy"

    • கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று தெரிவித்தார்.
    • கியூபா அல்லது சோவியத் யூனியனுக்குத் இடம்பெயர அனுமதி கோரினார் என்பதைக் குறிக்கிறது.

    அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஜான் எஃப் கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் கார் அணிவகுப்பின்போது ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு கருத்துகள், அதன் பின்னணி போன்றவை குறித்த சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது.

    இது தொடர்பான அலுவல் ரீதியான கோப்புகளை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அதிபர் டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.

    அதன்படி, ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது.

    கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்களின்  குறிப்பிடத்தக்க பகுதிகள் கொலையாளி லீ ஹார்வி ஆஸ்வேலடின் செயல்பாடுகளை விவரிக்கின்றன.   

    படுகொலைக்கு சில வாரங்களுக்கு முன்பு மெக்சிகோவில் உள்ள சோவியத் மற்றும் கியூப தூதரகங்களுக்கு ஆஸ்வேல்டு மேற்கொண்ட பயணங்களை CIA குறிப்புகள் கோடிட்டுக் காட்டுகின்றன. அவர் கியூபா அல்லது சோவியத் யூனியனுக்குத் இடம்பெயர அனுமதி கோரினார் என்பதை இது குறிக்கிறது.

    படுகொலைக்கு ஒரு வருடம் கழித்து, அதிபர் லிண்டன் பி ஜான்சன் விசாரிக்க நிறுவிய வாரன் கமிஷன், ஆஸ்வேல்டு தனியாக செயல்பட்டதாகவும், சதித்திட்டத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் முடிவு செய்தது.

     

    ஆனால் தற்போது வெளியாகி உள்ள கோப்புகளில் உள்ள அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் அந்த வாதம் பொருந்தவில்லை. இந்த ஆவணங்கள், கென்னடியின் வாகன அணிவகுப்புக்கு அருகில் உள்ள ஒரு உயரமான பகுதியான புல்வெளி மேட்டில் இருந்து மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று கூறுகின்றன. எனவே ஆஸ்வேல்டு தனியாக செயல்பட்டார் என்பதில் இருந்து இது முரண்படுகிறது.

    ரஷியாவின் உளவுத்துறையான KGB ஆஸ்வேல்டை கண்காணித்து வந்ததாக தற்போது வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க உளவுத்துறையான CIA அறிக்கை ஒன்று , 1963 இல் செப்டம்பரில் மெக்சிகோ நகரத்தில் உள்ள சோவியத் தூதரகத்தில் ஒரு KGB அதிகாரியுடன் ஆஸ்வேல்டு பேசியதைக் குறிக்கும் தொலைபேசி அழைப்பு ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    ஆனால் இதன் மூலம் கேஜிபியுடன் ஆஸ்வேல்டின் ஒத்துழைப்பையோ அல்லது வழிநடத்துதலையோ உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஆஸ்வால்டை KGB நெருக்கமாகக் கண்காணிப்பது உறுதிப்படுத்த முடிகிறது.

    இதுபோல பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியான ஆவணங்களில் தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

     

     

    • அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
    • டிரம்பிற்கு போட்டியிட உள்ள உரிமையை பறிப்பது அமெரிக்க குணம் அல்ல என்றார் ராபர்ட்

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆனால், கடந்த 2020ல் அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட தனது ஆதரவாளர்களை அனுப்பி தேச துரோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பெயரை வாக்கு சீட்டிலிருந்து நீக்கவும், அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

    டிரம்பை தீவிரமாக எதிர்த்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களில், ஜூனியர் கென்னடி.

    டொனால்ட் டிரம்பிற்கு தடை விதிக்கப்படுவது குறித்து ஜூனியர் கென்னடியிடம் கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் டிரம்பின் ஆதரவாளனோ ரசிகனோ இல்லை. அதனால்தான் அவரை எதிர்த்து தேர்தலில் களம் இறங்குகிறேன்.

    ஆனால், அவரை சமநிலையற்ற ஆடுகளத்தில் வெல்ல விரும்பவில்லை.

    அமெரிக்க மக்களுக்கு ஒரு நேர்மையான தேர்தலை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. பல விவாதங்கள் நடைபெற்று, மக்கள் ஒரு முடிவுக்கு வந்து பிறகு ஒருவரை தேர்ந்தெடுக்கும் நியாயமான ஜனநாயகத்தை கோர அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

    ஒரு அமெரிக்க குடிமகனுக்கு எந்த ஆதாரமுமில்லாமல் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுவது பெரும் தவறு. நம் நாட்டை ஒரு அறிவில்லாதவர்களின் நாடு போல் உலக அரங்கில் காட்டி விடும்.

    குறுகிய பார்வை கொண்ட இந்த முடிவு எடுக்கப்பட்டால், டிரம்ப் ஒரு கடவுளை போல் கொண்டாடப்படுபவர் ஆகி விடுவார்.

    இது அமெரிக்கர்கள் எடுக்கும் முடிவே அல்ல.

    இது தவறான திசையில் பயணிக்கும் முடிவு. மேலும், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு கென்னடி ஜூனியர் கூறினார்.

    1961ல் அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவியேற்ற ஜான் எஃப். கென்னடி (John F. Kennedy), 1963ல் டெக்ஸாஸ் (Texas) மாநில டல்லாஸ் (Dallas) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    பிறகு 1968ல், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜான் கென்னடியின் சகோதரர், ராபர்ட் எஃப். கென்னடி, கலிபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    அந்த ராபர்ட் கென்னடியின் மகன்தான் ராபர்ட் எஃப். கென்னடி, ஜூனியர் (Robert F. Kennedy, Jr.) என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் பேரன் ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் ‘புளூ பிளட்ஸ்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.#jackschlossberg #bluebloods
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் பேரன் ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் ‘புளூ பிளட்ஸ்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    இதுகுறித்து, ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தனது நீண்ட நாள் கனவு நனவாகியிருக்கிறது என்றும், புளூ பிளட்ஸ் மிகச்சிறந்த படமாக இருக்கும்’ எனவும் பதிவிட்டுள்ளார்.

    மேலும், அவரது தாயார் கரோலின் கென்னடியுடன் போலீஸ் உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். #johnkennedy #jackschlossberg #bluebloods

    ×