search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jonny Bairstow"

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
    • இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

    அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

    தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

    தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    பெங்களூர் அணி

    இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
    • முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் இந்த போட்டி 100-வது போட்டியாகும். 

    இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி வீரர்கள் 100-வது போட்டியில் விளையாடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டைர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடி இருந்தனர். 

    • தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
    • என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான்.

    இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.

    இந்நிலையில், ஜானி பேர்ஸ்டோ தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேர்ஸ்டோ,"100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் பெரிய விஷயம். என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான். எனது தந்தை இறக்கும்போது 10 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு 3 இடங்களில் பணிபுரிந்து எங்களை வளர்த்தார். அவர் இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதும் எனது அம்மா வலிமையாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

    தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரை இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது 

    • பேர்ஸ்டோ விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.சி.சி. கிளப் உறுப்பினர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
    • அவர்கள் மீண்டும் லார்ட்ஸ் ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    லண்டன்:

    லண்டன் லார்ட்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் 371 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 327 ரன்னில் ஆல்-அவுட்டாகி 43 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 பவுண்டரி, 9 சிக்சருடன் 155 ரன்கள் விளாசியும் பலன் இல்லை.

    கடைசி நாளில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவின் (10 ரன்) அவுட் சர்ச்சைக்குள்ளானது. அவர் கேமரூன் கிரீன் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை குனிந்து தவிர்த்து விட்டு, எதிர்முனையில் நின்ற பேட்ஸ்மேனுடன் பேசும் தொனியில் கிரீசை விட்டு வெளியேறி சில அடி முன்னேறினார். அதற்குள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை பிடித்து ஸ்டம்பு மீது எறிந்து அவுட் கேட்டு அப்பீல் செய்தார். 3-வது நடுவர் இது ஸ்டம்பிங் என்று தீர்ப்பளித்தார். ஓவர் முடிவதற்குள் இவ்வாறு நகர்ந்ததால் விதிமுறைப்படி இது அவுட் தான். ஆனால் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு பொருத்தமற்ற செயல் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கோபமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பும் போது, மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) உறுப்பினர்களுக்கான நீண்ட அறையை கடந்து தான் செல்ல வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த இடத்திற்கு வந்த போது பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டால் அதிருப்திக்குள்ளாகி இருந்த சில உறுப்பினர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னரை வம்புக்கு இழுத்தனர். அவர்களும் பதிலுக்கு ஏதோ வசைபாடியபடி சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், எம்.சி.சி. கிளப்பிடம் புகார் செய்தது. இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கவாஜா கூறுகையில், 'எனக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் லண்டன் லார்ட்சும் ஒன்று என்று நான் எப்போதும் சொல்வேன். ஆனால் இன்றைய நாள் லார்ட்சில் சில எம்.சி.சி. உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அவர்கள் தாறுமாறான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினர். அதற்கு நானும் பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது அவமரியாதைக்குரிய செயல்' என்று கண்டித்தார்.

    நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய எம்.சி.சி. ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டிய 3 உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களை கிளப்பில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. அவர்கள் மீண்டும் லார்ட்ஸ் ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே சமயம் இது குறித்து விசாரணை நடைபெறும் என்று எம்.சி.சி. கூறியுள்ளது.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
    • பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார்.

    லண்டன்:

    5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவர் முடிந்த நிலையில் மைதானத்திற்கு வெளியே இருந்து சில போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். குறிப்பாக வார்னரை நோக்கி ஓடினர். அப்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் கையில் வைத்திருந்த வர்ண பொடியை மைதானத்தில் தூவினர்.

    பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார். அதன் பிறகு தனது டீஷர்ட் மற்றும் கையுறை ஆகியவை வர்ண பொடியால் அழுக்கான நிலையில் டிரெஸிங் ரூம் சென்று மாற்றிவிட்டு மீண்டும் வந்தார்.

    இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    • முதல் டி20 போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • சாம் கரனை தோளில் தூக்கிய வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் இங்கிலாந்து அணி 234 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் 20 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேர்ஸ்டோவ் சக வீரர்களில் ஒருவரான சாம் கரனை தோளில் தூக்கி உடற்பயிற்சி செய்தார். இந்த வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.
    • ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என வாசிங் ஜாபர் கூறினார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் 378 ரன்களை இங்கிலாந்து அணி சேசிங் செய்து சாதனை படைத்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜானி பேர்ஸ்டோவ் - ஜோரூட் சதம் அடித்து அசத்தினர்.

    இந்நிலையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான சிறப்பான வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது. ஜோரூட் -ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான ஃபார்மில் இருந்து பேட்டிங்கை மிகவும் எளிதாக்கியுள்ளனர். உறுதியான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் ஒரு முன்னாள் வீரர் இருவரையும் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் தொடக்கக்காரரான வாசிங் ஜாபர் கூறியதாவது:- இரண்டு பேருக்கும் போதிய பாராட்டு இல்லை. ஜோரூட் இப்போது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவாலை எதிர்கொண்ட விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை பிடித்தபோது அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. #JonnyBairstow
    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில்இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை பிடித்த போது காயமடைந்தார். பந்து சரியாக அவரது இடது கை விரல்களை தாக்கியதால் வலியால் துடித்தார். உடனடியாக வெளியேறிய அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

    ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இடது கை நடுவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய தொடரில் ஆடுவது சந்தேகம் தான். 2-வது இன்னிங்சில் அவசியம் ஏற்பட்டால் பேட்டிங் செய்வார்.  #JonnyBairstow
    ஸ்காட்லாந்திற்கு எதிரான தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதிதான் என்று சதம் அடித்த இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். #SCOTvENG
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்திற்கு எதிராக 371 ரன்கள் குவித்த கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து, 6 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான பேர்ஸ்டோவ் 59 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் வெற்றியை நோக்கிச் சென்ற இங்கிலாந்து 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 365 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததற்கு, கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விளையாட்டில் இதுபோன்ற தோல்வி சகஜம்தான் என்று பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஸ்காட்லாந்திற்கு எதிரான தோல்வி விளையாட்டு போட்டியின் ஒரு பகுதி. நீங்கள் நம்பர் ஒன் அணியாக இருக்கும்போது, மக்கள் உங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்பவார்கள். ஆனால் நீங்கள் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்க விரும்புவீர்கள்.



    நாங்கள் நம்பர் ஒன் அணியாக இருப்பதற்காக விளையாடுகிறோம். நாங்கள் நம்பர் ஒன் ஆக இருந்தாலும், இல்லை என்றாலும் ஸ்காட்லாந்து அணி அவர்கள் வெற்றியை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். தற்போதைய வெற்றி கொண்டாட்டம் சாதாரணமாக இருக்காது. ஏனென்றால் நாங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றோம்.

    முன்னணி வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது வித்தியாசமான சவால். முற்றிலும் மாறுபட்ட ஆஸ்திரேலியா அணி. அவர்களுக்கு எதிராக விளையாட இருக்கிறோம். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், வார்னர், ஸ்மித் இல்லாமல் புது வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த வீரர்கள் அணியில் நிரந்தர இடம்பிடிக்க விரும்புவார்கள். நிரந்த இடத்திற்கு வீரர்கள் விரும்புவது எவ்வளவு அபாயகரமானது என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
    ×