search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jugs"

    • குடிநீரில் உப்புத்தன்மை அதிகளவில் உள்ளதாகவுப், இவை குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் உகந்ததாக இல்லை அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.
    • எனவே ஏற்கனவே அறிவித்த கூட்டு குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட உத்திரவாகினிபேட், பீமாராவ் நகர், பெரியபேட், புதுப்பேட், எஸ்.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத்தன்மை அதிகளவில் உள்ளதாகவுப், இவை குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் உகந்ததாக இல்லை அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.

    எனவே ஏற்கனவே அறிவித்த கூட்டு குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மணவெளி உத்தரவாகினிபேட் பகுதியில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை மணவெளிபகுதியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அறிவித்த உத்தரவாகினி பேட் பகுதியில் திட்டம் தொடங்கப்படவில்லை. இந்தக் கூட்டு குடிநீர் திட்டத்தை உத்தரவாகனிப்பேட் பகுதியில் செயல்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று காலை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வில்லியனூர் தொகுதி செயலாளர் தமிழ்வளவன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், விடுதலை சிறுத்தைகள் தமிழ்நாடு, புதுவை அமைப்பு செயலாளர் தலையாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் காலி குடங்கள், பானைகளை உடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தமிழ்மாறன், செல்வநந்தன், அரிமா தமிழன் உள்ளிட்ட மாநில தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வில்லியனூர் தொகுதி பொருளாளர் தமிழரசன் நன்றி கூறினார்.

    ×