search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jurel"

    • ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார்.
    • ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர்.

    இந்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும் கில் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்திலும் ஜூரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடருகிறார். ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 2 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் பொறுத்தவரை கோலி மட்டுமே டாப் 10 இடத்திற்குள் உள்ளார்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

    • அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜூரேல் 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 408 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 37 ரன்னில் வெளியேறினார்.

    ஜுரேல்

    அடுத்து பும்ரா களம் இறங்கினார். அறிமுக வீரர் ஜுரேல் அரைசதம் நோக்கி சென்றார். ஆனால் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரேஹன் பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அப்போது இந்திய 415 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா கிடைத்தது வரை லாபம் என்ற வகையில் அதிரடியாக விளையாடினார். இன்று பந்து நன்றாக அவரது பேட்டில் பட ரன்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் இந்தியா 450 ரன்களை நோக்கி சென்றது. ஆனால் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹன் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஜடேஜா 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் அவுட்.
    • அறிமுக வீரர் ஜுரேல் 31 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோரின் சதங்கள், சர்பராஸ் கான் அரைசதத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 112 ரன்னில் ஆட்டம் இழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஜுரேல் முதலில் திணறினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார். அஸ்வின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்த ஜோடி அரைசதம் ரன்களை கடந்தது.

    மேலும், இன்றைய 2-வது நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது. ஜுரேல் 31 ரன்னுடனும், அஸ்வின் 25 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

    ×