என் மலர்
நீங்கள் தேடியது "Justice Sanjiv Khanna"
- ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
- மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.
தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.
தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
- உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.
- டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார்.
டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு விழா நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார்.

சஞ்சீவ் கன்னா கடந்த 1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்து 1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.
பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். மேலும் சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்ளில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna