search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadak Singh"

    • கடக் சிங் படத்தை அனிருத் சௌதிரி இயக்கியுள்ளார்.
    • இந்த திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி வெளியடப்பட இருக்கிறது.

    இந்தியாவின் 54 வது சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ.) துவக்க விழா நடைபெறும் கோவாவில் பங்கஜ் த்ரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கடக் சிங்'–கின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலரை ஜீ5 வெளியிடுகிறது.

    அனிருத் சௌதிரி இயக்கத்தில் பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியடப்பட இருக்கிறது.

    இந்த திரைப்படம் வெவ்வேறு வடிவங்களில் உறவுகளின் முக்கியத்துவம், உறவுகள் எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களை அளிக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ஷாந்தனு மொய்த்ரா இசையமைக்க, அவிக் முக்பத்யாய் ஒளிப்பதிவும், அர்காகமல் மித்ரா படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

    ×