என் மலர்
நீங்கள் தேடியது "kaduva"
- நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘கடுவா’.
- இப்படம் தமிழில் வெளியாகவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'கடுவா'. இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
கடுவா
இந்நிலையில், 'கடுவா' திரைப்படத்தை தமிழில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'கடுவா' திரைப்படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.
கடுவா போஸ்டர்
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோல்டு' மற்றும் 'காப்பா' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதையடுத்து 'கடுவா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் கடுவா.
- மாற்றுத்திறனாளி ஆணையம் பிருதிவிராஜ் நடித்த கடுவா படத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிருதிவிராஜ், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ள கடுவா மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரது வாழ்க்கை உண்மை கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
இந்த நிலையில் கடுவா படத்தில் "மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் காரணம்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கேரள மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் இயக்குனர் ஷாஜி கைலாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது குறித்து ஷாஜி கைலாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் இயக்கிய கடுவா படத்தில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை வேதனைப்படுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திரைக்கதையில் அந்த வசனம் வரும்போது கதாநாயகன் பிரித்விராஜோ, இயக்கிய நானோ அதன் மற்றொரு பக்கம் பற்றி யோசிக்காமல் செய்துவிட்டோம் என்பதுதான் உண்மை" என்று பதிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்து பிரித்விராஜும் மன்னிப்பு கேட்டுள்ளார், அதில் "மன்னிக்கவும். தவறு நடந்துவிட்டது. ஏற்றுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மலையாள திரையுலகின் பிரபலமான நடிகர் பிரித்விராஜ்.
- பிரித்விராஜ் நடித்து வெளியாகவுள்ள படம் கடுவா.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் இயக்குனர் ஷானி கைலாஷ் இயக்கத்தில் கடுவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா மேனன், விவேக் ஓபராய், அர்ஜுன் அஷோகன், சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வரும் ஜூலை -7 ஆம் தேதி தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த்
இந்நிலையில் படத்தின் புரோமோஷன் பணியில் இறங்கியுள்ள கடுவா படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரித்விராஜ் கலந்து கொண்டு கூறுகையில், " கமல் சாரின் காமெடி சென்ஸ் பற்றி நமக்கு தெரியும். பஞ்சதந்திரம் போன்ற படங்களில் பார்த்திருப்போம்.
ஆனால், ரஜினி சாரின் காமெடி சென்ஸ் குறித்து அவ்வளவாக யாரும் பேசியது இல்லை. ரஜினி சாருக்கு சிறந்த நகைச்சுவை தன்மை உள்ளது. அவரை குடும்ப நகைச்சுவை படங்களில் பார்க்க நான் ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.