என் மலர்
நீங்கள் தேடியது "Kailash Mansarovar Yatra"
- தலா 50 யாத்ரீகர்கள் கொண்ட 5 குழுக்கள் உத்தரகாண்ட் எல்லை வழியாக யாத்திரை மேற்கொள்வார்கள்.
- தலா 50 யாத்ரீகர்கள் கொண்ட 10 குழுக்க்ள சிக்கிம் எல்லை வழியாக யாத்திரை மேற்கொள்வார்கள்.
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, வருகிற ஜூன் மாதம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் தங்களுடைய பழைய நிலைக்கு திரும்ப ஒப்புக்கொண்டு பின்வாங்கிய பிறகு, இருநாட்டு உறவுகளை மேம்படுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 50 யாத்ரீகர்கள் கொண்ட 5 குழுக்கள் உத்தரகாண்ட் மாநில எல்லை லிபுலேக் பாஸ் வழியாகவும், 50 யாத்ரீகர்கள் கொண்ட 10 குழுக்கள் சிக்கிம் மாநில எல்லை நாது லா பாஸ் வழியாகவும் செல்வார்கள். இந்த யாத்திரை ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.
kmy.gov.in இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியா கடந்த 2020 ஆம் ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடைபெற்றது. கல்வாண் பள்ளத்தாக்கு தாக்குதல் காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டது.
- 2020-ம் ஆண்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
- ராஜாங்க ரீதியிலான உறவு (diplomatic relations) தொடங்கப்பட்டு 75 வருடம் நிறைவடைவதை தொடர்ந்து ஒப்புதல்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்குவதற்கும் இந்தியா- சீனா ஒப்புக் கொண்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியிலான உறவு (diplomatic relations) தொடங்கப்பட்டு 75 வருடம் நிறைவடையும் 2025-ம் ஆண்டில் இரு நாடுகளும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
2020-ம் ஆண்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீனா வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நேரடி விமான சேவையை தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த சில தினங்களுக்கு முன் மானசரோவர் பகுதியில் தங்கி அங்குள்ள மானசரோவர் ஏரியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘மானசரோவர் ஏறி மிகவும் மென்மையானது சாந்தம் மற்றும் அமைதியாக உள்ளது. அது எல்லாவற்றையும் கொடுக்கிறது. இந்த ஏரியில் இருந்து எவரும் நீர் அருந்தலாம். அதில் வெறுப்பு காட்டுவது கிடையாது. அதனால்தான் நாம் இந்த நீர்நிலையை வணங்குகிறோம்.’ என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் கைலாஷ் யாத்திரையின் போது 34 கி.மீ தூரத்தினை 13 மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்துள்ளதாகவும் இதன் மூலம், பல ஆயிரம் கலோரிகள் குறைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #KailashMansarovarYatra
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ந் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றார். அன்று இரவு அங்குள்ள வூட்டு ஓட்டலில் ராகுல்காந்தி தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட்டார்.
அப்போது அவர் அசைவ உணவு வகைகளையும், சிக்கன் சூப்பும் சாப்பிட்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
அந்த ஓட்டல் ஊழியரிடம் பேட்டி எடுத்து செய்தியை வெளியிட்டு இருந்தது.
இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி கூறும் போது, “ராகுல்காந்தி புனித யாத்திரை செல்லும் போது அசைவ உணவை சாப்பிட்டதன் மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தி விட்டார். அவர் அசைவம் சாப்பிட்டதில் தவறு இல்லை. புனித யாத்திரை சென்றபோது அசைவம் சாப்பிட்டது கண்டிக்கத்தக்கது” என்றார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து வூட்டு ஓட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ராகுல்காந்தி சைவ உணவுகளையே சாப்பிட்டதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இமாச்சல பிரதேச மாநிலம் ஜாவாலி தொகுதி காங்கிரஸ் முன்னாள் நீரஞ்பார்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணரின் கதையை விளக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. #RahulGandhi #MansarovarYatra
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.
மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்தது. சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்னாலி மாகாணத்தில் அமைந்துள்ள சர்கெட் எனும் பகுதியில் சிக்கித்தவித்த 96 இந்திய பக்தர்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #MansarovarYatra
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 625 பக்தர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிமிகோட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்துள்ளது.
இதுவரை 2 விமானங்கள் மூலம் 104 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிக்கித்தவிக்கும் யாத்ரீகர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MansarovarYatra
