என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kajal aggarwal"

    • நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், மாரி போன்ற பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
    • போலிஸ் அதிகாரியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார்.

    2007 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான லக்ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக காஜல் அகர்வால் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து 'சந்தாமாமா' படத்தின் மூலம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

    2009 ஆம் ஆண்டு ராஜமௌளி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா' படம் காஜல் அகர்வாலுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், நாயக், பிசின்ஸ் மேன் போன்ற பிரபல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.

    பின் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்தார்.

    நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாற்றான், மாரி போன்ற பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

    கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கருங்காப்பியம் படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து தெலுன்கு படமான தற்பொழுது சத்யபாமா படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ் ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஏசிபி போலிஸ் அதிகாரியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 17 ஆம் தேதி வெலியாகிறது என படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதையொட்டி காஜல் அகர்வாலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிரிப்டோகரன்சி நிறுவன திறப்பு விழாவில் நடிகை தமன்னா, காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளனர்.
    • அதற்காக தமன்னாவுக்கு ரூ.25 லட்சமும், காஜலுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    ரூ.50 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை அழைக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

    அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற தொடக்க விழாவுடன், கோவையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளார்.

    முதலீடு செய்தவர்களின் தொகைக்கு ஏற்ப, நடிகை காஜல் அகர்வாலை வைத்து 100 நபர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளனர். அதேபோல, மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை நடத்தி, அதன்மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ஜெயின்,36, அரவிந்த் குமார்,40, ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில், கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    கிரிப்டோகரன்சி நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்றதற்காக தமன்னாவுக்கு ரூ.25 லட்சமும், காஜலுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • 2 பெண்கள் உள்பட 10 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன் (வயது 70). இவர் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.98 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலில் கோவையை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின் (வயது36) அரவிந்த்குமார், (40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுபோன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த மோசடியில் தொடர்புடைய 2 பெண்கள் உள்பட 10 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவை, மாமல்லபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் மோசடி செய்த பணத்தை கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து, மிக பெரிய அளவில் விழாக்களை நடத்தியுள்ளனர்.

    இதில் சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களை அழைத்து வந்துள்ளது தெரியவந்தது.


    இதற்காக நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணம் எந்த வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    இதுதொடர்பாக புதுச்சேரி வக்கீல்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல், வக்கீல்களை அனுப்பலாம், ஒருவேளை சம்மன் பெற மறுத்தால் வீட்டில் சம்மன் ஒட்டுவார்கள். அதன்பிறகும் சம்மனுக்கு மதிப்பளிக்கா விட்டால் கோர்ட்டு மூலமாக நடவடிக்கை எடுத்து வரவழைக்கலாம்.

    அப்போதும் வக்கீல் அனுப்பி விளக்கம் தெரிவிக்கலாம். நேரில் அவர்களிடமே விளக்கம் பெற விரும்பினால் வக்கீல் முன்னிலையில் அவர்கள் விளக்கம் தரலாம்.

    நல்லெண்ண அடிப்படையில் அந்த விளம்பரத்தில் நடித்தோம். எங்களுக்கு வேறு எந்த தொடர்பும் கிடையாது என அவர்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

    மோசடியில் அவர்களுக்கு தொடர்பு இல்லாத நிலையில் அவர்களை அதிகப்பட்சமாக சாட்சியாக சேர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • புதுச்சேரி போலீசார் கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
    • தமன்னாவிடம் விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியதாக தகவல் .

    புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன் (வயது 70). இவர் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.98 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலில் கோவையை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின் (வயது36) அரவிந்த்குமார், (40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுபோன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவை, மாமல்லபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் மோசடி செய்த பணத்தை கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து, மிக பெரிய அளவில் விழாக்களை நடத்தியுள்ளனர்.

    இதில் சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களை அழைத்து வந்துள்ளது தெரியவந்தது.

    இதற்காக நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணம் எந்த வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தமன்னா, "கிரிப்டோகரன்சி மோசடியுடன் என்னை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற போலியான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தனது மகன் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

    தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு அண்மையில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இவர் தனது மகன் குறித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    காஜல் அகர்வால்

    அதில், " இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது.

    ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இப்போது நீ புரண்டு படுக்கிறார், இடமிருந்து வலம் நகருகிறாய், என் மேல் ஏறுகிறாய் இதெல்லாம் ஏதோ ஒரு இரவில் நடந்ததைப் போல இருக்கிறது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது.


    காஜல் அகர்வால்

    இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் இதைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். நீ எங்களை எந்த அளவிற்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். கடவுள் தான் உன் மூலம் எங்களை ஆசிர்வதித்து இருக்கிறார். உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாகக் கருதுகிறேன்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.
    • இவர் கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.


    கவுதம் கிச்சலு - காஜல் அகர்வால்

    தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது.


    கவுதம் கிச்சலு - காஜல் அகர்வால்

    இவர் தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் காஜல் அகர்வாலுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கணவருடன் இணைந்து முதல்முறையாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். 

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    காஜல் அகர்வால்

    இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்புக்கு தன்னை தயார் செய்துகொண்டிருக்கும் இவர் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். குதிரையுடன் பயிற்சி எடுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள இவர் அதனுடன் பதிவை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

    அதில், ``நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து நான் வேலைக்கு திரும்பி உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு முன்பு என்னால் அதிகமான வேலைகளை செய்ய முடியும். ஜிம்மில் வொர்க்அவுட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை என்னால் செய்ய முடிந்தது. ஆனால், குழந்தைப் பிறப்புக்கு பின்பு முன்பிருந்த அதே எனர்ஜி லெவலை கொண்டு வருவது என்பது கடினமாக உள்ளது.


    காஜல் அகர்வால்

    குதிரை மேல் சவாரி செய்வது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. நம்முடைய உடல் மாறலாம், மாற நேரம் எடுக்கலாம். ஆனால், நம்முடைய எல்லையில்லாத ஆர்வமும், ஆசையும் என்றும் மாறாதது. எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய தேர்வு குறித்து என்றும் நாம் கவலைப்படக் கூடாது.

    'இந்தியன்2' படத்தில் மீண்டும் நான் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. வேலையின் பொருட்டு புதிய திறமைகளை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல் கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. என்னை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு நான் எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன்' என நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.



    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.
    • இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தற்போது இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் "பாகுபலி" கட்டப்பா பாணியில் இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    காஜல் அகர்வால்

    பாகுபலிக்கு தான் அடிமை என்பதை குறிக்கும் வகையில் கட்டப்பா, பாகுபலியின் காலை தனது தலையில் வைப்பார். அது போன்று தன் குழந்தையின் காலை காஜல் அகர்வால் தன் தலை மீது வைத்து, " ராஜமவுலி சார்.. இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    ஓராண்டுக்கு மேலாக முடங்கி இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.
    ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் இயக்குனர் ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓராண்டுக்கு மேலாக முடங்கி உள்ளது. தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.

    காஜல் அகர்வால்

    இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவரால் மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது, இதன்காரணமாக அவருக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்.
    தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் காஜல் அகர்வால். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் தெலுங்கில் வெளியான மகதீரா திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால் மிகவும் பிரபலமானார்.

    இதையடுத்து தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார். இவர் கடந்த ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

    காஜல் அகர்வால்

    இந்நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து விளம்பரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஒரு முன்னணி நடிகை இப்படியா நடந்துகொள்வது என ரசிகர்கள் பலர் திட்டி கமென்ட் செய்து வருகின்றனர்.
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்' படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

    பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா' என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.



    இதுதவிர ஜெயம் ரவியுடன் இணைந்து `கோமாளி' படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கமல்ஹாசனின் `இந்தியன் 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படம் சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஜூனில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
    கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வரும் நிலையில், படம் மீண்டும் துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கிய நிலையில் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. 

    கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன் 2 படத்தை தயாரிக்க ‌ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது.



    தற்போது ‌ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகா நிறுவனதே ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×