என் மலர்
நீங்கள் தேடியது "Kalakad"
களக்காடு:
களக்காடு ஆவுடைவிலாசம் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது72). இவரது மனைவி வசந்தா. இவர்கள் மகன் முத்துராஜுடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 25-ந் தேதி பழனி ஆற்றுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பழனி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மகன் முத்துராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பழனியை தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகில் உள்ள கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் உச்சி மாகாளி (38). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சகுந்தலா (34) என்ற மனைவியும், முகேஷ் (9) என்ற மகனும், ஹரினி (7) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று உச்சிமாகாளியு,ம், படலையார்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவன்பாண்டி (38) யும் கோவில் கொடை விழாவிற்கு ஆடு வாங்குவதற்காக பைக்கில் சேரன்மகாதேவி நோக்கி சென்றார். பத்மநேரி ரோட்டில் சென்ற போது எதிரில் களக்காடு நோக்கி வந்து கொண்டிருந்த அழகப்ப புரத்தை சேர்ந்த கண்னன் என்பவர் ஓட்டி வந்த பைக்கும், உச்சிமாகாளி சென்ற பைக்கும் மோதியது.
இதில் உச்சிமாகாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற சுடலையாண்டி மற்றொரு பைக்கை ஓட்டி வந்த அழகப்பபுரத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.