என் மலர்
நீங்கள் தேடியது "kamalhasan"
- தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் 'கலைஞர் 100' விழாவில் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்
- கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது என கமல்ஹாசன் புகழாரம்
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் சென்னை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திரளான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, ரஜினி காந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்சியில் , மிசா காட்சிகளை கலைஞராக தம்பி ராமையாவும், ஸ்டாலினாக விதார்த்தும் நடித்த காட்சிகளை கண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் கண் கலங்கினார்.
இந்நிகழ்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது. சிறுவயதில் என்னுடைய அக்காக்கள் எனக்கு தலை சீவி விடும்போது கலைஞர் மாதிரி நடு வகுடு எடுத்து சீவி விடுங்கள் என்பேன். எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதல்வருக்கு நன்றி என தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, அரசியலில் பல மாற்றங்கள் கொண்டுவந்த போது சினிமாவையும் ஒருசேர கொண்டுவந்தவர் கலைஞர் என கூறினார். "பராசக்தி படத்தில் நீ வேணும் என்றால் ஆட்சிக்கு வந்து மாத்திகாட்டேன் என எழுதி இருப்பார். அதேபோல் முதலமைச்சராக அமர்ந்து தான் எழுதியதை செய்துகாட்டியவர் கலைஞர்" என நடிகர் சூர்யா புகழாரம் சூட்டினார்.
- சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.
- 1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, ‘தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் ‘தளபதி' வசூல் குவிக்க, ‘குணா' அப்போட்டியில் சறுக்கியது.
அண்மையில் வெளியான மலையான திரைப்படமான `மஞ்சுமேல் பாய்ஸ்' தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் படத்தின் ஒட்டுமொத்த கதையுமே `குணா' குகையை மையப்படுத்தியதுதான். அதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.
1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, 'தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் 'தளபதி' வசூல் குவிக்க, 'குணா' அப்போட்டியில் சறுக்கியது. எனினும், 25 ஆண்டுகள் கழித்தும் குணா படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவு அதனை 'கல்ட்' கிளாசிக் படமாக மாற்றியுள்ளது.
'குணா' படத்தில் வரும் குகை குறித்து 1991ல் நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில், "கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத பிரதேசங்களிலெல்லாம் 'குணா' படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் இயக்குநர் சந்தானபாரதியும் 7 கி.மீ அலைந்தும் திருப்தியான இடம் அமையவில்லை.
'இன்னும் 1 கி.மீ போய் பார்ப்போமே' என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது. அது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே அமைத்தோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே 700 அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது" என்று கமல் பேசியிருப்பார்
- அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கவுள்ளார்.
- பிறந்தநாள் கொண்டாடும் அவர் நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென் ஒரு ஸ்டைல் இருக்கும். கடைசியாக கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் எடுத்த படத்திலயே அதிக வசூலை அள்ளி குவித்த படம் லியோ. மார்வல் யூனிவர்ஸ், டி.சி யூனிவர்ஸ் போன்ற கான்செப்டுகளை ஹாலிவுட் படங்களிலே நாம் பார்த்து இருப்போம். தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனக்கு என LCU யூனிவர்ஸ் ஒரு கான்செப்டை உருவாக்கினார். இதற்கு முன் கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். அப்படமும் கமல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்டது. கமலின் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கவுள்ளார். சமீபத்தில் விஜய்குமார் நடிப்பில் வெளிவந்த 'ஃபைட் க்ளப்'படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரித்தார். இதுவே அவர் தயாரித்த முதல் படம்.

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் கொண்டாடும் அவர் நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். லோகேஷின் நண்பரான இயக்குனர் ரத்னகுமார், நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை ஸ்ருதிஹாசன் அப்போது உடனிருந்தனர். இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி பந்தயம் நடைபெறுகிறது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
இதைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமல் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதால் உற்சாகம். நம் விருந்தோம்பல் மற்றும் விளையாட்டுத் திறமை ஆகியவற்றைக் காண்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.
தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், கிழக்கின் டெட்ராய்டகாவும் மாற்றியதற்கு முதல்வர், உதயநிதிக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், " சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது இந்தியாவிற்கே உற்சாகம் அளிப்பதாக உள்ளது. நாட்டில் முதன்முறையாக பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
சென்னையில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்தை ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்" என்றார்.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'இந்தியன் 2'.
- இப்படத்தில் மீண்டும் நடிப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். 'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், 'இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார்.

இந்தியன் 2
'இந்தியன்-2' படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த காஜல் அகர்வால் 'இந்தியன்-2' படம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு மாற்றாக வேறொரு கதாநாயகி நடிப்பார் என்று கருதப்பட்டது.

காஜல் அகர்வால்
இந்நிலையில் சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் ஒரு புதிய தகவலை பதிவிட்டு இருக்கிறார். அதில், 'இந்தியன்-2 படத்தில் நான் நிச்சயம் நடிக்கிறேன். படப்பிடிப்பு செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்குகிறது', என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்த வதந்திகளுக்கு காஜல் அகர்வால் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதையொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. கட்சி துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேர்மையாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படிதான், நான் மக்களை வழி நடத்துவேன். நம் கட்சி தொண்டர்களும் அப்படிதான் செயல்பட்டனர். இன்று தமிழகத்தில் மூன்றாவது இடம் மாற்று என மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுள்ளது. இன்னும் அயராது பாடுபடும்.
நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு இந்த தேர்தலில் வாக்குகள் பெற்றுள்ளோம். மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக கருத வேண்டும். அரசியலை நான் தொழிலாக நினைக்கவில்லை. தொழிலாக நினைத்தால் அது மாபெரும் தவறு.
14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓட விட்டுள்ளனர். மக்களின் வாக்குகள், நாங்கள் நேர்மையான வழியில் பயணித்து பணிகளை மேற்கொள்ள மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. தமிழக மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இதில் புதுச்சேரி தொகுதியில் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதுச்சேரி தொகுதி வேட்பாளர் டாக்டர். எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மேலும் எனது தேர்தல் பிரச்சாரத்தினை மார்ச் 27 அன்று கலாபேட்டிலிருந்து துவங்க உள்ளேன். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் ஏஎப்டி மைதானத்தில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்வார்.
இவ்வாறு அவர் பேசினார். #makkalneedhimaiamparty #PuducherryCandidate

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடவிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் இன்று வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் பெயர் வருமாறு:-
அரக்கோணம்-என். நாகேந்திரன், வேலூர்-ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரி- காருண்யா, தர்மபுரி-வழக்கறிஞர் ராஜசேகரன், விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி, சேலம் -என் பிரபு மணிகண்டன், நீலகிரி -வழக்கறிஞர் ராஜேந்திரன், திண்டுக்கல்- டாக்டர் சுதாகர், திருச்சி- வி. ஆனந்தராஜா, மத்திய சென்னை- கமிலா நாசர், சிதம்பரம்- ரவி, மயிலாடுதுறை- ரிபைதின், நாகை- குருவையா, தேனி- வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி- பொன் குமரன், திருநெல்வேலி- வெண்ணிமலை, கன்னியாகுமரி-எபிநேசன், புதுச்சேரி-எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், திருவள்ளூர் - லோக ரங்கன், வடசென்னை- ஏஜி மவுரியா, ஸ்ரீபெரும்புதூர்- என் சிவக்குமார்.
முதற்கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற வேட்பாளர்கள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். #makkalneedhimaiamparty #kamal