என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Kamarajar Award"
- விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படும்.
- விருது முதலமைச்சரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
பெருந்தலைவர் காமராசர் விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும், ஒரு முறை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை பாராளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படும். இவ்விருது முதலமைச்சரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளார்.
- 2021-2022 கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர்.
- திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார்.
உடுமலை :
உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ். சஹானா பர்வின், கோ. சி. யாழினி ஆகியோர் 2021-2022 கல்வியாண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது பெற பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர். விருது பெற்ற மாணவிகளுக்கு காமராசர் விருதுக்கான சான்றிதழை திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வழங்கினார். 12 ம் வகுப்பு மாணவி எஸ். சஹானா பர்வின் வங்கிக்கணக்கில் ரொக்கப்பரிசு ரூ. 20ஆயிரமும், 10 ம் வகுப்பு மாணவி கோ. சி. யாழினி வங்கிக் கணக்கில் ரொக்கப்பரிசு ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற மாணவிகளை பள்ளித்தலைமை ஆசிரியர் ப. விஜயா, உதவித்தலைமை ஆசிரியர்கள் ஏ. ஜெயராஜ், மஞ்சுளா, தமிழாசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டினர்.