என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kamatchiamman temple"
- 10.15 மணிக்கு காமாட்சியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- காலை 11 மணிக்கு தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் பிரிவு, பழனிச்சாமி நகரில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு 4-ம் காலயாக பூஜையுடன் விழா தொடங்கியது. காலை 10 மணிக்கு விநாயகர், காமாட்சியம்மன், முத்துக்குமாரசாமி கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு காமாட்சியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.வடி வேல், செயலாளர் டி.என். ஈஸ்வரன்,பொருளாளர் ஆர். செந்தில்குமார் உள்பட கோவில்கமிட்டிநிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 11 மணிக்கு தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திரைப்பட இன்னிசை விருந்து நடக்கிறது. நாளை 27-ந்தேதி மாலை 6 மணிக்கு முனைவர் அரசு பரமேசுவரன் தலைமையில் பக்தியும் பண்பாட்டையும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.வடி வேல், செயலாளர் டி.என். ஈஸ்வரன்,பொருளாளர் ஆர். செந்தில்குமார் உள்பட கோவில்கமிட்டிநிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- அனுஷ பூஜை பக்த சபா குழு சார்பில், மாதம்தோறும், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி யாகவேள்வி பெருவிழா நடந்தது.
உடுமலை :
உடுமலை ஸ்ரீ மகா பெரியவர் அனுஷ பூஜை பக்த சபா குழு சார்பில், மாதம்தோறும், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி யாகவேள்வி பெருவிழா நடந்தது.விழாவையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது; பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்